அதிரசம் (Athirasam Recipe in Tamil)
#தீபாவளிரெசிப்பீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை ஒரு மணிநேரம் ஊற விடவும்.
ஊறிய பிறகு தண்ணீரை வடித்து விட்டு ஒரு துணியில் கொட்டி நிழலில் காய விடவும். - 2
லேசான ஈரப்பதம் இருக்கும் போதே மாவு அரைக்கும் மிஷினில் கொடுத்து அரைத்து கொள்ளவும்.
அதை நன்றாக சலித்து எடுத்துக் கொள்ளவும். - 3
இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெல்லத்தை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பதம் எப்படி என்றால் ஒரு சின்ன தட்டில் தண்ணீர் ஊற்றி அதில் பாகை விட்டால் கரையாமல் அப்படியே தட்டின் அடியில் போய் ஒட்டி கொள்ளும் அதை லேசாக சேர்த்து எடுத்தால் கையில் எடுக்க வரும் அது தான் பதம்.....பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அதில் மாவைகொட்டி, ஏலக்காய் தூளையும் சேர்த்து கிளறவும். - 4
கொஞ்சம் இளக்கமாகத்தான் இருக்கும்
மறுநாள் எடுத்து எண்ணெயை காயவைத்து அதில் அதிரசத்தை சுட்டு எடுக்கவும்.மாவு இறுகி விட்டால் வெதுவெதுப்பான பாலை தெளித்து பிசைந்து கொள்ளலாம். அது இன்னும் கூடுதல்சுவையுடன்இருக்கும்.மிருதுவாகவும் இருக்கும். - 5
உடனே செய்வதை விட மறுநாள் செய்யும் போது சுவை நன்றாக இருக்கும்.
நான் மிஷினில் அரைக்கும் போதே அரிசியுடன் ஏலக்காயை சேர்த்தே அரைத்துவிடுவேன்... தோலோடு சேர்த்து அரைப்பதால் வாசனை நன்றாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
- மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
- சாளை மீன் மிளகு கறி (Saalai Meen Milagu Kari Recipe in Tamil)
- கோதுமை பாதுஷா (Gothumai Badhusa Recipe in Tamil)
- வஞ்சரம் மீன் தலை குழம்பு (Vanjaram Meen Thalai Kulambu Recipe in Tamil)
- மட்டன் சுவரொட்டி பெப்பர் ஃப்ரை (Mutton Pepper fry Recipe in Tamil)








கமெண்ட்