வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக்
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின்பு அதில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.
- 3
அதன்பின் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.இறுதியாக வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். இப்பொழுது டிஸ்போசபிள் டீ கப்புகளில் எண்ணையை தேய்த்து கரைத்த மாவை பாதிக்கப் நிரம்பும் வரை ஊற்றவும். அதன் மேல் துருவிய நட்ஸ்சை சேர்க்கவும்
- 4
கடாயில் கடாயில் ஒரு ஸ்டாண்டை வைத்து மூடியை மூடி 10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும். பிறகு கேக் கலவையை ஸ்டாண்டின் மேல்வைத்து அதனை 20- 30 நிமிடம் சிம்மில் வேக வைத்து எடுக்கவும்
- 5
ஈஸியான மற்றும் சுவையான டீ டைம் வெண்ணிலா கப் கேக் தயார் 😋
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட்