ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)

#பார்ட்டி
வருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபி
முயற்சி செய்து பாருங்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டி
வருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபி
முயற்சி செய்து பாருங்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சமையல் குறிப்புகள்
- 1
கேக் செய்ய:
- 2
மைதா உடன் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து இரண்டு முறை ஜலித்து கொள்ளவும்
- 3
கேக் ட்ரேயில் பட்டர் தடவி பட்டர் பேப்பர் விரித்து அதன் மேல் மீண்டும் பட்டர் தடவி மைதா டஸ்ட் செய்து ரெடியாக வைக்கவும்
- 4
முட்டை ஐ வெள்ளை கரு தனியாக மஞ்சள் கரு தனியாக பிரித்து வைக்கவும்
- 5
வெள்ளை கருவை ஐஸ்கிரீம் பதத்தில் நன்கு அடித்து (பீட் செய்து) வைக்கவும்
- 6
பாத்திரத்தில் இருந்து எடுத்தால் அப்படியே பஞ்சு போல் இருக்க வேண்டும் வெள்ளை கருவை அடிப்பது மிகவும் முக்கியமானது கவனமாக செய்ய வேண்டும்
- 7
மஞ்சள் கரு உடன் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு தனியாக பீட் செய்யவும்
- 8
ஓவனை 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பத்து நிமிடங்கள் வரை சூடாக்கவும்
- 9
பின் பட்டர் உடன் பொடித்த சர்க்கரை ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 10
பின் அடித்து வைத்துள்ள மஞ்சள் கருவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 11
பின் அடித்து வைத்துள்ள வெள்ளை கருவை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொள்ளவும்
- 12
அதிகம் பீட் செய்ய வேண்டாம்
- 13
பின் பீட் செய்வதை நிறுத்தி விட்டு ஜலித்து வைத்துள்ள மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து ஒரு புறமாக கலந்து கொள்ளவும்
- 14
ஒரு புறமாக மட்டும் கலக்கவும் அப்போது தான் காற்று குமிழிகள் உள் நின்று கேக் மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும்
- 15
பின் பாலை சிறிது சிறிதாக சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்
- 16
பின் ரெடியாக உள்ள ட்ரேயில் கொட்டி சமப்படுத்தி சூடான ஓவனில் வைத்து 170 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
- 17
மூன்று மணி நேரம் வரை ஆறவிடவும்
- 18
ரசமலாய் செய்ய:
- 19
பனீரை நன்கு பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
- 20
சர்க்கரை ஐ அளந்து அது ஒரு கப் என்றால் தண்ணீர் 4 கப் (1:4 என்ற விகிதத்தில்)சேர்த்து ஏலத்தூள் கலந்து கொதிக்க விடவும்
- 21
பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துள்ள பனீரை சேர்த்து மூடி வைத்து 25 நிமிடங்கள் வரை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும்
- 22
பின் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து இரண்டு மணி நேரம் வரை சர்க்கரை பாகில் ஊறவிடவும்
- 23
ரபடி செய்ய:
- 24
பால் ஐ அடுப்பில் வைத்து பாதியாக சுண்டி வரும் வரை கொதிக்க விடவும்
- 25
பின் குங்குமப்பூ உடன் சிறிது பால் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்
- 26
பின் 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை மற்றும் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும்
- 27
பின் குங்குமப்பூ கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
- 28
பின் சர்க்கரை பாகில் இருந்து பனீரை வடிகட்டி எடுத்து பாலுடன் சேர்த்து ஐந்து நிமிடம் வரை கொதித்ததும் இறக்கவும்
- 29
பின் ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை குளிரவிடவும்
- 30
பின் ஐசிங் செய்ய:
- 31
சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து (1/4 கம்பி பதம்)கொதிக்க விட்டு ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 32
பட்டர் உடன் ஐசிங் சுகர் ஐ சிறிது சிறிதாக சேர்த்து வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 33
கேக் ஐ மூன்று பீஸாக (லேயராக) கட் செய்து கொள்ளவும்
- 34
பின் ஒரு ஃபீஸ் மீது சர்க்கரை சிரப் ஐ ஊற்றவும்
- 35
பின் அதன் மேல் ரெடியாக உள்ள ஐசிங் ஐ தடவவும்
- 36
பின் ரசமலாய் ரபடியை சிறிது ஊற்றி சிறிது ரசமலாய் ஐ அடுக்கும்
பின் அதன் மேல் அடுத்த லேயர் கேக் ஃபீஸ் வைத்து அழுத்தி விடவும் - 37
பின் மீண்டும் சுகர் சிரப் ஐ ஊற்றவும்
- 38
பின் மீண்டும் ஐசிங் ஐ தடவவும்
- 39
பின் மீண்டும் சிறிது ரசமலாய் ரபடியை ஊற்றவும் மீண்டும் சிறிது ரசமலாய் ஐ அடுக்கவும்
- 40
பின் மீண்டும் அடுத்த லேயர் கேக் ஃபீஸ் ஐ வைத்து அழுத்தி விடவும்
- 41
பின் இப்போது கேக் மேல் புறம் மட்டும் இல்லாமல் கேக் முழுவதும் ஐசிங் ஐ தடவவும்
- 42
பின் மேல் ரபடி ஐ தவிர்த்து ரசமலாய் ஐ மட்டும் அடுக்கவும்
- 43
இறுதியாக நட்ஸ் ஐ தூவி குங்குமப்பூ தூவி விரும்பிய வாறு அலங்கரிக்கவும்
- 44
பின் பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வரை குளிரவிட்டு பரிமாறவும்
- 45
சுவையான மணமான ரசமலாய் கேக் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes







கமெண்ட்