பால் கொழுக்கட்டை

#lockdown recipes
கணவர் மற்றும் குழந்தைகள் விடுமுறை என்பதால் இந்த lockdown நேரத்தில் என் சமையலறை மிகவும் பரபரப்பாக உள்ளது....காலை பால் காய்ச்சும் போது பற்ற வைக்கும் அடுப்பு இரவு பால் காய்ச்சிய பிறகு தான் அடைகின்றோம்...

சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி மாவில் சிறிது உப்பு சேர்த்து சுடுநீர் சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 3
பின்னர் பாத்திரத்தில் பால் ஊற்றி ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 4
பால் நன்றாக கொதிக்கும் போது அடுப்பில் தீயை குறைத்து கொள்ளவும்
- 5
பின்னர் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்க்கவும்
- 6
15 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்.
- 7
உருண்டைகள் வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 8
பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கி அதை பால் கொழுக்கட்டையில் சேர்த்து பரிமாறவும்...
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்