ஸ்டஃப்டு பனீர் நாண்

#cookwithfriends
#shyamaladevi
பனீர் ஸ்டப் செய்த சுவையான ரிச்சான ஒரு வகை நாண் இது. பாலக் கிரேவி அல்லது தால் இதற்கு நல்ல காம்பினேஷன்.
ஸ்டஃப்டு பனீர் நாண்
#cookwithfriends
#shyamaladevi
பனீர் ஸ்டப் செய்த சுவையான ரிச்சான ஒரு வகை நாண் இது. பாலக் கிரேவி அல்லது தால் இதற்கு நல்ல காம்பினேஷன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஸ்டஃப்பிங் செய்ய பனீர் உதிர்த்து பின் வெங்காயம், கொத்தமல்லி மற்றும் கொடுத்துள்ள அனைத்து பொடிகளையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
மைதாவுடன் மாவு பிசைய தேவையான பொருட்களை சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விட்டு கொள்ளவும். மாவு சிறிது தளர்வாக இருக்க வேண்டும்
- 3
பிசைந்த மாவு முழுவதையும் கையால் நன்கு தட்டி அதன் மேல் ஒரு டீஸ்பூன் ஸ்பூன் நெய்யை தடவவும்.
- 4
பின் அதை இரண்டாக மடக்கி சுருட்டவும். மறுபடியும் ஒரு டீஸ்பூன் நெய் தடவிய மேலும் ஒரு முறை சுருட்டி கொள்ளவும்
- 5
இப்போது இதை சமமான பங்காக கட் செய்து உருட்டிக் கொள்ளவும்
- 6
ஒரு உருண்டையை எடுத்து கையால் தட்டி அதன் நடுவில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு ஸ்டப்பிங் வைத்து மூடவும்
- 7
மூடியதை சிறிது கனமாக கையால் தட்டி கொள்ளவும்.அதன் மேல் சிறிது கருஞ்சீரகம் மற்றும் கசூரி மேத்தி வைத்து அழுத்தி கொள்ளவும்
- 8
இதேபோல் அனைத்தையும் செய்து கொள்ளவும்
- 9
கைப்பிடியுடன் கூடிய சூடான இரும்பு தவாவில் நானில் அடி பக்கம் தண்ணீர் தடவி ஒட்டி கொள்ளவும்
- 10
இரண்டு நிமிடங்கள் வெந்ததும் அதை தவாவோடு தணலில் திரும்பிக் காட்டி மிதமான தீயில் மற்றொரு பக்கம் வேக வைக்கவும்.வெந்ததும் சிறிது நெய் மேலே தடவவும்.
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட் (6)