முடக்கறுத்தான் தோசை (Mudakkaruthaan dosai recipe in tamil)

#leaf
இயற்கை நமக்களித்த வர பிரசாதத்தில் ஒன்றான உடலுக்கு நன்மை தரும் பாரம்பரிய வகைகளில் பெரும்பங்கு வகிக்கும் கீரை வகை உணவான முடக்கறுத்தான் (முடக்கத்தான்) கீரையை பயன்படுத்தி தோசை செய்யும் செய்முறையை இந்த பதிவில் பார்ப்போம்.
முடக்கறுத்தான் தோசை (Mudakkaruthaan dosai recipe in tamil)
#leaf
இயற்கை நமக்களித்த வர பிரசாதத்தில் ஒன்றான உடலுக்கு நன்மை தரும் பாரம்பரிய வகைகளில் பெரும்பங்கு வகிக்கும் கீரை வகை உணவான முடக்கறுத்தான் (முடக்கத்தான்) கீரையை பயன்படுத்தி தோசை செய்யும் செய்முறையை இந்த பதிவில் பார்ப்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
முடக்கத்தான் கீரையை கைப்பிடி அளவு எடுத்து நன்கு சுத்தம் செய்து ஆய்ந்து கொள்ளவும்.
- 2
அரைப்படி இட்லி அரிசி அதாவது புழுங்கல் அரிசி அதனுடன் ஒரு கைப்பிடி அளவு வெள்ளை உளுத்தம்பருப்பு சேர்த்து 4 மணிநேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
- 3
நன்கு ஊறியதும் அதை கிரைண்டரில் இட்டு அது பாதி அரைபட்ட பின் கீரையை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கிரைண்டர் மாவுடன் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 4
குறிப்பு : கிரைண்டரில் கீரையை அரைக்காமல் மிக்ஸியில் போட்டு அரைத்து பின் கிரைண்டரில் நன்கு அரைத்து கொள்ளவும்.
- 5
நன்கு அரைத்தபின் ஒரு நாள் வைத்திருந்து மறுநாள் தேவைக்கேற்ப மாவை எடுத்து தோசை வார்த்துக் கொள்ள ஏதுவாக மாவை தயார் செய்து தோசை அருமையாக இருக்கும்.
- 6
அதாவது மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தளர்த்தி சரிசெய்ய வேண்டும்.
- 7
குறிப்பு : மூடி வைத்து சுட்டால் பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.
- 8
- 9
சைட் டிஷ்ஷாக பூண்டு மிளகாய் பொடியுடன் நல்லெண்ணெய் விட்டு கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
- மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
- முடக்கத்தான் கீரை சூப் (Mudakkaththaan keerai soup recipe in tamil)
- தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)
- முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
- முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)













கமெண்ட் (2)