குடைமிளகாய் சாதம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் எண்ணெய் இல்லாமல் கடலைப்பருப்பு 1 மேக உளுத்தம்பருப்பு 1 மேக காய்ந்த மல்லி 2 மேக புளி சிறிதளவுதேங்காய் துருவல் 4 மேக உப்பு 1/2 மேக பெருங்காயம் 1/2 தேக காய்ந்த மிளகாய் 6 மஞ்சள் பொடி 1/2 தேக
இவை அனைத்தும் நன்கு வறுத்து எடுக்கவும்
- 2
ஒவ்வொரு பொருளாக சேர்த்து வறுக்கவும்
- 3
தேங்காய் துருவல் ஈரப்பதம் போகும் வரை வறுக்கவும்
- 4
வறுத்து எடுத்த பொருட்களை சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்
- 5
பின்னர் கடாயில் 1 தேக நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்க வேண்டும்.
- 6
பின்னர் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும் 3 நிமிடம். 1/2 மேக உப்பு சேர்த்து வதக்கவும்
- 7
பின்னர் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள பொடியை 4 மேக சேர்த்து வதக்கவும்
- 8
பின்னர் 2 கப் வேகவைத்த சாதம் சேர்த்து கிளறவும். சுவைக்கேற்ப அரைத்த பொடி உப்பு வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளலாம்
- 9
பரிமாறுவதற்கு முன்பு 1 மேக நெய் கொத்தமல்லி பொடியாக நறுக்கியது சேர்த்து பரிமாறவும்.
- 10
சுவையான ஆரோக்கியமான குடைமிளகாய் சாதம் தயார்..
வாழ்க வளமுடன் 🙏
Keywords
Similar Recipes
More Recipes



























கமெண்ட்