கோன் கொழுக்கட்டை (cone kolukkattai recipe in tamil)

#everyday4
கொஞ்சம் வித்தியாசமாக கோன் கொழுக்கட்டை செய்துள்ளேன் அருமையாக இருந்தது.இதில் செவ்வாழைப்பழம் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
கோன் கொழுக்கட்டை (cone kolukkattai recipe in tamil)
#everyday4
கொஞ்சம் வித்தியாசமாக கோன் கொழுக்கட்டை செய்துள்ளேன் அருமையாக இருந்தது.இதில் செவ்வாழைப்பழம் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தட்டிச் சேர்க்கவும்,அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஏலக்காயை தட்டிச் சேரத்து கொதிக்க விடவும்.வெல்லம் உருகி நன்றாக கொதிக்க விட்டு ஆற வைக்கவும்.
- 2
வேறொரு பாத்திரத்தில் தேவையான அளவு அரிசி மாவு எடுத்துக் கொள்ளவும்,அதில் வெல்ல பாகுவை வடிக்கட்டி சேர்க்கவும்,கனிந்த செவ்வாழைப்பழத்தை மசித்து சேர்க்கவும்.
- 3
ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவல் சேர்த்து மாவு கட்டி இல்லாமல் நன்றாக கரைக்கவும்.தண்ணீர் சேர்க்காமல் வெல்ல பாகுவை மட்டும் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
- 4
வாழை இலையை எடுத்து மளிகைக் கடையில் பொட்டலம் போடுவதுப் போல் பொட்டலம் போட்டு அதில் மாவுக் கலவையை சேர்த்து மடித்து வைக்கவும்.
- 5
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இட்லி தட்டில் பொட்டலத்தை வைக்கவும்.வாழை இலை கிடைக்காவிட்டால் டம்ளர் அல்லது சிறிய மூடி போன்ற பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 6
வெந்து முடிந்தப்பின் ஆறியவுடன் மெதுவாக வாழை இலையை எடுக்கவும்.தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்.
- 7
மாலை வேலையில் இது போன்று குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.இதில், வெல்லம்,செவ்வாழைப்பழம் சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது,மேலும் வாழை இலை வைத்து செய்வதால் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
























கமெண்ட் (6)