பூரி உருளைக்கிழங்கு மசால்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் உருளைக்கிழங்கு இரண்டாக நறுக்கி சேர்த்து பட்டாணியை 6 மணி நேரம் ஊற வைத்து கிழங்குடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்து நீளமாக வெங்காயம் நறுக்கியது கறிவேப்பிலைை, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து வதக்கி 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
- 4
மசாலா கொதித்து பச்சை வாசனை போனதும் உப்பு சரிபார்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான உருளைக்கிழங்கு மசால் தயார்.நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14918642













கமெண்ட்