தலைப்பு- இனிப்பு மாங்காய் ஊறுகாய்

அப்பாவிற்கு இனிப்பு மாங்காய் ஊறுகாய் பிடிக்கும். அவர்களுக்காக செய்தது
தலைப்பு- இனிப்பு மாங்காய் ஊறுகாய்
அப்பாவிற்கு இனிப்பு மாங்காய் ஊறுகாய் பிடிக்கும். அவர்களுக்காக செய்தது
சமையல் குறிப்புகள்
- 1
புளிப்பில்லாத மாங்காயை தோல் சீவி, கேரட் துருவியால் துருவிக்கொள்ளவும். இஞ்சி,பூண்டை தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
- 2
அடிகணமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு தாளித்து
- 3
அதில் நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெந்தயப்பொடி.பெருங்காயப் பொடி மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்
- 4
பின்பு அதில் துருவியமாங்காய், உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும். மாங்காய் வெந்து, மெதுவாக ஆனதும், வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து வெல்லம் கசிந்து பின் மாங்காயுடன் கலந்து சுருண்டு வரும் வரை வதக்கி ஆறியபிறகு சாப்பிடவும்.
- 5
பால் சாதம் சப்பாத்தி போன்றவற்றிற்கு சிறந்த இணை உணவாக இருக்கும். இனிப்பாக இருப்பதால் சிறுவா்களும் விரும்பி சாப்பிடுவார்கள்
Keywords
Similar Recipes
More Recipes







கமெண்ட்