வால்நட் பூரண கொழுக்கட்டை

#walnuttwists
மிக சுலபமாக செய்து விடலாம். சத்து நிறைந்தது.
வால்நட் பூரண கொழுக்கட்டை
#walnuttwists
மிக சுலபமாக செய்து விடலாம். சத்து நிறைந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வால்நட் பருப்பை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்து அதில் வெல்லத்தை சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து கலந்து வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் உப்பு சேர்த்து கலந்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் கொதிக்க வைத்த தண்ணீர் சேர்த்து கிளறவும்.மாவு கெட்டி பதம் ஆனவுடன் ஆற வைத்து பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து மெல்லியதாகத் வட்ட வடிவில் தட்டி அதில் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து பிளாஸ்டிக் ஷீட்டை இரண்டாக மடிக்கவும். பிறகு பிளாஸ்டிக் ஷீட்டை தனியாக எடுக்கவும்.
- 3
பூரணம் வைத்த கொழுக்கட்டை மாவை இட்லி பானையில் வைத்து 7 நிமிடம் வேக விடவும். அதிக நேரம் வேக விட்டால் விரிசல் வந்துவிடும்.இப்பொழுது சுவையான சத்தான வால்நட் பூரண கொழுக்கட்டை தயார்.
Keywords
Similar Recipes
More Recipes









கமெண்ட்