தக்காளி மிளகு ரசம்🍅🍅☘️☘️👌👌

#refresh1
அருமையான ருசியான புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய தக்காளி ரசம் செய்ய முதலில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் கொத்துமல்லி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை,வரமிளகாய், பூண்டு பற்கள், தக்காளி, அனைத்தையும் ஒன்றாக பச்சையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு,
சிறிய பெருங்காயம் கட்டி, கறிவேப்பிலை,போட்டு பொறிய விட வேண்டும்.பின் அரைத்து வைத்த தக்காளி கலவையை கடாயில் ஊற்றி எண்ணெயில் ஒரு வதக்கு வதக்கி விட வேண்டும். பின் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை அதனுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். அதனுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி ரசம் நுரை கட்டும் வரை அடுப்பில் விடவும். நுரை கட்டியவுடன் கொத்துமல்லி இலைகளை தூவி இறக்க வேண்டும். நமது தக்காளி ரசம் தயார்👍👍

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
கொத்தமல்லி,சீரகம், மிளகு, பூண்டு பற்கள், வரமிளகாய், கறிவேப்பிலை, தக்காளி அனைத்தையும் வறுக்காமல் பச்சையாக மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஊற வைத்த புளியை கரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 3
கடாயில் 2 ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி கடுகு, சிறிய பெருங்காயம் கட்டி, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 4
பின் கடாயில் பச்சையாக அரைத்து வைத்துள்ள தக்காளி, கொத்தமல்லி,சீரகம், மிளகு,கலவைகளை கடாயில் ஊற்றி எண்ணெயில் ஒரு வதக்கு வதக்கி விட வேண்டும். பின் அதனுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றிக் கலந்து விட வேண்டும்.
- 5
பின் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி உப்பு தேவைக்கேற்ப சேர்க்க வேண்டும். கடையில் அனைத்தையும் நன்கு கலந்துவிட வேண்டும்.
- 6
தக்காளி மிளகு ரசம் நுரை கட்டும் வரை அடுப்பிலேயே விட வேண்டும். ரசம் நுரை கட்டியதும் கொத்துமல்லி இலைகளை தூவி இறக்கவேண்டும்.
- 7
நமது ருசியான புத்துணர்ச்சியூட்டும் தக்காளி மிளகு ரசம் தயார்👍 வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்👌👌நன்றி😊
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்