எக் முகலாய்
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு முட்டையை வேக வைத்து எடுக்கவும். ஒரு முட்டையை நான்கவும் அடுத்த முட்டையை குட்டியாகவும் வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையை ஊற்றவும். சிறிதளவு உப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்.
- 3
அதனுடன் மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும். தோசை கல்லில் எண்ணெய் ஊற்றவும்.
- 4
கலவையை ஊற்றி முட்டை வெந்ததும் நறுக்கிய முட்டையை அதன் மேல் வைத்து எடுக்கவும்.
- 5
ஒரு வாணலியில் எண்ணை விட்டு வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி சேர்க்கவும்.
- 6
அதனுடன் உப்பு மிளகாய் தூள் கரம் மசாலா சேர்க்கவும்.
- 7
சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கிளறவும்.
- 8
தோசை கல்லில் நறுக்கிய முட்டை பச்சை மிளகாய் சேர்த்து அதனுடன் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
- 9
முட்டையை கீழே வைத்து அதன் மீது தக்காளி வெங்காயம் கலவையை வைத்து அதன் மீது பொறித்த முட்டையை வைத்தால் எக் முகலாய் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15117979




























கமெண்ட் (4)