பச்சை வண்ண குடைமிளகாய் ஆம்லெட்🌶️🍳👌👌👌👌

#colours2 சத்துள்ள சுவையான குழந்தைகள் பார்த்ததும் விரும்பக்கூடிய பச்சை வண்ண குடைமிளகாய் ஆம்லெட் செய்ய முதலில் குடைமிளகாயை கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.பின் குடைமிளகாயை வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் முட்டையை உடைத்து உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி வட்டமாக வெட்டி எடுத்து வைத்துள்ள குடைமிளகாயை தோசை கல்லின் மீது வைத்து, அதன் மேல் கலந்து வைத்துள்ள முட்டையை தேவையான அளவு ஊற்றி, முட்டையின் மேலே மிளகுத் தூள், கரம் மசாலா, நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை, தக்காளி தூவி பின் திருப்பிப் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்... சுவையான சத்துள்ள பச்சை குடைமிளகாய் ஆம்லெட் தயார்🤗🤗

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை குடைமிளகாய் தக்காளி, கறிவேப்பிலை, அனைத்தையும் வெட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 2
முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கலந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
பின் கலந்து வைத்துள்ள முட்டையில் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 4
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதன் மேல் வட்டமாக வெட்டி வைத்துள்ள குடைமிளகாயை வைக்க வேண்டும்.
- 5
பின் குடைமிளகாயின் உள் பகுதியில் மட்டும் தேவையான அளவு கலந்து வைத்துள்ள முட்டையை ஊற்றவும். பின் அதன் மேல் சிறிது கரம் மசாலா தூவி விடவும். பின் அதன் மேல் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை தக்காளியை சிறிது தூவி விடவும்.
- 6
பின் அதன் மேல் மிளகு பொடியை தூவவும். நன்கு வேகும் வரை தோசை கல்லில் ஒரு நிமிடம் அப்படியே விடவும். பின் திருப்பி போட்டு ஒரு நிமிடம் வேக விடவும்.
- 7
நமது சுவையான சத்து மிகுந்த பச்சை வண்ண குடைமிளகாய் ஆம்லெட் தயார்👍 குழந்தைகள் இதைப் பார்த்ததும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்👌👌👌👌 வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்👍 நன்றி😊
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்