சாக்கோபார் ஐஸ் ஸ்டிக்🍫
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் அரை லிட்டர் பால் ஊற்றிக் கொள்ளவும் பால் காய்ந்தவுடன் 10 ஸ்பூன் பால் பவுடர் எடுத்துக் கொள்ளவும்
- 2
பால் பவுடருடன் சிறிதளவு தண்ணீர் கலந்து காய்ந்த பாலுடன் சேர்த்துக் கொள்ளவும் நன்கு கொதி வந்தவுடன் 10 ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்
- 3
பிறகு 1 ஸ்பூன் வெனிலா எஸன்ஸ் சேர்த்துக் கொள்ளவும் பின் நன்கு கலந்து கொள்ளவும் ஒரு பௌலில் பால் எடுத்துக் கொள்ளவும்
- 4
பாலுடன் 2 ஸ்பூன் சோள மாவு சேர்த்துக் கொள்ளவும் அதையும் காய்ச்சிய பாலுடன் சேர்த்துக் கொள்ளவும் நன்கு கலந்து பால் பாதியாகும் வரை நன்கு கொதிக்க விடவும்
- 5
பிறகு தேவைக்கேற்ப வடிவத்தில் தம்ளர் எடுத்துக்கொள்ளவும் அதில் காய வைத்த பாலை சேர்த்துக் கொள்ளவும்
- 6
பிறகு அதற்கு மேல் அலுமினியம் பாயில் வைத்து மூடிக்கொள்ளவும் பிறகு ஒரு டூத் பிக்கில் ஓட்டை விட்டு ஐஸ் ஸ்டிக்கை உள்ளே விடவும்
- 7
அனைத்தையும் அதேபோல் செய்து 9 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்க வேண்டும்
- 8
பிறகு ஒரு பௌலில் தண்ணீர் வைத்து அதற்கு மேல் ஒரு பவுலை வைத்துக்கொள்ளவும்
- 9
அதில் டார்க் சாக்லேட் ஐயும் எண்ணெயும் சேர்த்து உருக்கவும் பிறகு அதை நீளமான டம்ளரில் ஊற்றிக் கொள்ளவும்
- 10
9 மணி நேரம் கழித்து க்ரீமை சாக்லேட் இருக்கும் டம்ளரில் உள்ளே விடவும் பிறகு எடுத்து 45 நொடிகள் கையில் வைத்திருக்க வேண்டும் சாக்லேட் ஐஸ்கிரீம் உடன் ஒட்டிக்கொள்ளும்
- 11
பின் சுவையான சாக்கோபார் ரெடி....
Keywords
Similar Recipes
More Recipes





































கமெண்ட்