பலாக்கொட்டை சொதி குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை துருவி வைக்கவும் அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் சோம்பு ஒரு வெங்காயம் நறுக்கியது சேர்த்து வதக்கவும் தேங்காய் துருவலை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து பச்சை மிளகாய் கசகசாவை போட்டு வாசம் வரும் வரை வதக்கி இறக்கவும்
- 2
வதங்கிய பொருட்கள் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்
- 3
பலாக்கொட்டையை வெறும் வாணலியில் லேசாக வாடினால் மேலே உள்ள தோல் உரித்து வரும் மேலே உள்ள வெள்ளை தோலை உரித்து எடுத்து குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும் விசில் அடங்கியதும் வேக வைத்த பல கோட்டைகள் எடுத்து மேலே உள்ள சிகப்பு தோலை உரித்து எடுக்கவும்
- 4
அடுப்பில் கடாயை வைத்து சமையல் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு அன்னாசிப்பூ பிரியாணி இலை சோம்பு கருவேப்பிலை தாளித்து ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும் தக்காளியை சேர்த்து வதக்கவும்
- 5
வதங்கியதும் அரைத்த தேங்காய் மசாலாவை ஊற்றவும் தேவையான உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து தோல் உரித்த பலாக்கொட்டையின் சேர்த்து கொதிக்கவிடவும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும் பலாகொட்டை குழம்பு ரெடி
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes



















கமெண்ட் (4)