சைதாப்பேட்டை வடகறி & கீ ரோஸ்ட்
#veg என் சமையல் . சுவையான ஆரோக்கியமான சமையல்.
சமையல் குறிப்புகள்
- 1
கடலை பருப்பை ஊற வைக்கவும். ஊறிய பருப்பை மிக்ஸியில் போட்டு அத்துடன் சோம்பு, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து ஒன்றும் பாதியுமா அரைத்து எடுக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடையை தட்டி போட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு,பிரிஞ்ஜி இலை, சோம்பு சேர்த்து தாளிக்கவும். அத்துடன் வெங்காயம், இஞ்சி & பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி 🍅 சேர்த்து வதக்கவும்.
- 3
தக்காளி 🍅 நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாயை போட்டு கறிவேப்பிலை சேர்த்து மிளகாய் தூள்,மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து, கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும்.
- 4
வடையை பிய்த்து கொதிக்கும் கிரேவியில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். கீ தோசை செய்து வடகறியுடன் பரிமாறவும். சைதாப்பேட்டையில் புகழ்பெற்ற ரெசிபி.
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட்