முட்டை பேஜா(egg bejo recipe in tamil)

#CF1 முட்டையை வழக்கமாக வேக வைத்து சாப்பிடுவதை விட இந்த மாதிரி வேக வைத்து முட்டையின் உள்ளே மசாலாவை வைத்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்
முட்டை பேஜா(egg bejo recipe in tamil)
#CF1 முட்டையை வழக்கமாக வேக வைத்து சாப்பிடுவதை விட இந்த மாதிரி வேக வைத்து முட்டையின் உள்ளே மசாலாவை வைத்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முட்டை பேஜோ செய்ய, ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் நிளமாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, ஆகியவற்றை தனி தனியாக போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.
- 2
5 அல்லது 6 காய்ந்த மிளகாயை இடிகல்லில் போட்டு கொரகொர என்று தட்டி தனியாக வைத்து கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் பொரித்த பூண்டு, வெங்காயம், அரைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து கைகளால் பொடித்து நன்கு கலந்து கொள்ளவும் - 3
அடுத்து 3 வேக வைத்த முட்டை,ஒரு ஸ்பூன் உப்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும் அதேபோல் சிறிதளவு புளி ஊற வைத்து தண்ணீரை கரைத்து வைத்துக் கொள்ள முன் அரை எலுமிச்சம்பழத்தை பிழிந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் பூண்டு பொரித்த சூடான எண்ணெயை வைத்துக் கொள்ளவும்.
- 4
அடுத்து வேகவைத்த முட்டையின் நடுவில் சிறிதளவு வெட்டி அதனுள் பொரித்த வெங்காயம் பூண்டு கலவையை வைக்கவும்.
- 5
வைத்த பிறகு இதன்மேல் எலுமிச்சை சாறு, புளித்தண்ணீர், பொரித்த எண்ணெய், உப்பு கரைத்த தண்ணீர் ஊற்றவும். இவை அனைத்தையும் சில துளிகள் மட்டும் ஊற்றவும்.
- 6
ஊற்றிய பிறகு இறுதியாக கொத்தமல்லி இலையை அதன் மேலே வைத்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட்