டேனிஷ் பட்டர் குக்கீஸ்(danish butter cookies recipe in tamil)

#CF1
குக்கீஸ்
டேனிஷ் பட்டர் குக்கீஸ்(danish butter cookies recipe in tamil)
#CF1
குக்கீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஓர் கேக் மிக்ஸர் அல்லது ஒரு அகன்ற பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் பட்டர் சேர்த்து நன்றாக அரைத்து/ பிசைந்து கொள்ளவும்.
- 2
அத்துடன் மைதா மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.கையால் பிசைந்தால் கூடுதல் ருசி கிடைக்கும்.
- 3
நன்றாக பிசைந்த மாவை நான்கு பிரிவுகளாக பிரித்து அத்துடன் கிஸ்மிஸ்,அக்ரோட் பருப்பு, துருவிய கொப்பரை தேங்காய், காய்ந்த க்ரேன்பெர்ரீஸ் ஆகியவற்றை தனி தனியே சேர்த்து சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்
- 4
நீங்கள் விரும்பும் வடிவில் கையால் தட்டி ஒரு அலுமினியம் பேக்கிங் ட்ரெயில் பட்டர் பேப்பர் விரித்து அதில் சிறு இடைவெளி விட்டு தட்டிய சிறிய குக்கீ மாவை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
ப்ரீ ஹீட் செய்த(oven) அவனில் 200° C இல், 15 நிமிடம் வைத்து பேக் செய்து எடுக்கவும்.குக்கீஸ் வெள்ளை நிறம் சிறிது பிங்க் நிறமாக மாறியதும் அவனை(oven) விட்டு உடனே எடுத்துவிடவும்.
- 6
அவனை(oven) விட்டு குக்கீஸை எடுத்த 5 நிமிடங்களில் வயர் ட்ரேக்கு மாற்றி விடவும்.சூடு முழுவதுமாக ஆரியப் பின்னர் நல்ல ஏர் டைட் பாக்ஸில் போட்டு வைக்கவும். டேனிஷ் பட்டர் குக்கீஸ் தயார்.
- 7
அசல் டேனிஷ் பட்டர் குக்கீஸ் போலே இருக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.கட்டாயமாக வீட்டில் செய்து பார்த்து அசத்துங்கள்.
குறிப்பு :- 1. சர்க்கரையை தூள் செய்து சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
2. இயன்றவரை அலுமினியம் ட்ரெ பயன்படுத்துங்கள். அலுமினியம் ட்ரெயில் தான் நன்றாக வரும்.
Keywords
Similar Recipes
More Recipes
























கமெண்ட்