ரசகுல்லா சப்ஜி (Rasgulla recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலை நன்கு கொதி வரும் வரை காய்ச்சவும். காய்ச்சிய பாலில் வினிகர் ஊற்றவும். பால் திரிந்து பஞ்சு பஞ்சாக திரண்டு வரும். பால் திரிந்து தனியாகவும், தண்ணீர் தனியாகவும் பிரிந்துவிடும். திரிந்த பால் நீர் வற்றி சற்று கெட்டியாக இருக்கும்போது, மேலும் சற்று கெட்டியாக்க அத்துடன் சோளமாவை சேர்த்து பிசையவும். பிசைந்து வைத்துள்ளதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தை எடுத்து சர்க்கரை, ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு தயாரிக்கவும்.
- 2
10 நிமிடங்கள் சமைக்கவும், இப்போது ஏலக்காயை அகற்றி, ரசகுல்லா உருண்டை சேர்க்கவும். 10 நிமிடங்களுக்கு high flame இல் சமைக்கவும், பின்னர் 15 நிமிடங்கள் low flame இல் சமைக்கவும். அதை முழுமையாக குளிர்வித்து பிறகு பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15810898



கமெண்ட்