சாக்லேட் பிளம் கேக்(chocolate plum cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காற்றுப்புகாத பாத்திரத்தில் ஊற கொடுக்கப்பட்டுள்ள பொருளில் முதலில் திராட்சை பழச் சாறை ஊற்றி அதனுடன் கருப்பு திராட்சை, வெள்ளை திராட்சை,வால்நட்,பாதாம், முந்திரி, நறுக்கிய பேரீச்சம் பழம் சேர்த்து இத்துடன் பட்டைத்தூள், ஜாதிக்காய் தூள், ஏலக்காய்த் தூள், காய்ந்த இஞ்சி தூள் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும் இவை மூழ்கும் அளவுக்கு இருக்க வேண்டும்
- 2
இப்போது இவற்றை மூடி குறைந்தது 24 மணி நேரம் வைக்கவும் நான் 48 மணி நேரம் இவற்றை ஊற வைத்தேன் அப்போது இன்னும் நன்றாக இருக்கும்
- 3
இரண்டு நாள் கழித்து முதலில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து கேரமெல் தயாரித்து அதனை ஆற வைக்கவும்
- 4
மற்றொரு பாத்திரத்தில் மிருதுவான வெண்ணெய் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் நன்றாகக் கலந்து கொள்ளவும்.. அடுத்த 5 முட்டையில் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 5
அதன் பிறகு இதில் மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் கொக்கோ பவுடர், தயாரித்து வைத்திருக்கும் கேரமல்லையும் சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று சேரும் வரை கலக்கவும் அதிகமாக கலக்கக்கூடாது
- 6
இத்துடன் இரண்டு நாள் திராட்சைச் சாறுடன் ஊறவைத்த முந்திரி திராட்சை வகைகளை இத்துடன் சேர்த்து ஒன்றோடு ஒன்று நன்றாகக் கலக்கவும்
- 7
இப்போது பேக்கிங் டிரேயில் பட்டர் சீட்டை வைத்து அதன் மேல் இவற்றை ஊற்றவும்
நான் இரண்டு பேக்கிங் டிரே உபயோகப்படுத்தினேன்... 180 டிகிரி செல்சியஸில் 8” பேக்கிங் டிரேயில் 40 நிமிடமும், 6” பேக்கிங் டிரேயில் 60 நிமிடமும் ஆனது.. சுவையான சாக்லேட் பிளம் கேக் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
























கமெண்ட் (13)