கேப்பை கூழ் (ராகி கூழ்)(ragi koozh recipe in tamil)

#made1 ராகி கூழ் தேவாமிர்த்தங்க... வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்... வெயில் காலத்துல இத செஞ்சோம்னு வைங்க... அப்படி ஒரு சுவை..... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்....🤤🤤🤤

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பானைல தண்ணீர் ஊற்றி கொதிக்க விடனும்... தனியா ஒரு பாத்திரத்தில, ராகி மாவ போட்டு அளவா தண்ணி ஊத்தி கட்டி இல்லாம கரைச்சுகணும்... பானைல தண்ணி கொதிச்ச பிறகு, கரைச்சு வச்ச மாவ ஊத்தி கிளறனும்... மாவு வெந்து கட்டியாகும்... பக்கதுல இருந்து கிண்டிக்கோங்க... ராத்திரியே இத வேக வைச்சுடனும்... வெந்த பிறகு நீரா தண்ணி (பழைய சாத தண்ணி தாங்க) ஊத்தி அப்படியே மூடி வச்சுட்டு தூங்கிடுங்க😴😴😴
- 2
மறுநாள் காலையில, தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு மோர், தேவையான அளவு உப்பு, சின்ன வெங்காயம் போட்டு கிளறி குடிங்க...
- 3
தொட்டுக்க மாங்காய், மோர் மிளகாய், அப்பளம், வடகம் எல்லாமே அருமையா இருக்கும்... ஒன்னு போதுங்க, ஆனா நம்ம வீட்டு ஆளுங்க கூட இரண்டு இருந்தா இன்னும் மகிழ்ச்சியா சாப்பிடுவாங்க...அதுனால தான், அம்புட்டும் செஞ்சாச்சு...
ஆனந்தமா சாப்பிடுங்க..
ஆரோக்கியமா இருங்க....
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்