ரஷ்யன் ஹனி கேக்(russian honey cake recipe in tamil)

#FC Haseena
இந்த ரஷ்யன் ஹனி கேக் நம் ருசித்துப் பார்த்திடாத ஒரு புதுவித ருசியை ருசிக்கலாம்
ரஷ்யன் ஹனி கேக்(russian honey cake recipe in tamil)
#FC Haseena
இந்த ரஷ்யன் ஹனி கேக் நம் ருசித்துப் பார்த்திடாத ஒரு புதுவித ருசியை ருசிக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு முட்டை அரை தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
பிறகு ஒரு கடாயில் நம் எடுத்து வைத்துள்ள 50 கிராம் வெண்ணையை சேர்த்து வெண்ணெய் சிறிதளவு மெல்ட் ஆன பிறகு அதில் பாதி அளவு தேனை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும் பிறகு நம் சர்க்கரையை அதில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- 3
சக்கரை நன்கு கலந்த பிறகு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து கைவிடாமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும் பிறகு அடுப்பை அணைத்து பிறகு கைவிடாமல் ஒரு நிமிடத்திற்கு அந்த சூட்டிலேயே கலந்துவிட்டு விட வேண்டும் பிறகு
- 4
இந்த கேரமில் நன்கு ஆரிய பிறகு நாம் அடித்து வைத்துள்ள முட்டை கலவையை சிறிது சிறிதாக சூடு ஆறியத பிறகு சேர்த்து கலந்து விட வேண்டும் ஒரு கிரீமி பக்குவத்தில் இருக்க வேண்டும் சிறிதளவு உப்பும் சேர்த்து கலந்து நன்கு ஆற வைக்க வேண்டும்
- 5
ஆரிய பிறகு நாம் எடுத்து வைத்துள்ள இரண்டு கப் மாவை சிறிது சிறிதாக சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும் அது ஒரு சப்பாத்தி பதத்தில் லூசாக மாவு இருக்கும் பிறகு அதனை ஒரு பிளாஸ்டிக் கவரில் அதை மாவை ராப் செய்து பிரிட்ஜில் ஒரு 45 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்
- 6
ஒரு 45 நிமிடம் கழித்து அந்த மாவு சிறிதளவு டைட்டாக இருக்கும்
- 7
இப்போது மாவை நான்கு பங்காக பிரித்து அதனை ஒரு சிறிய சிறிய உருண்டையாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு உருண்டையை எடுத்து சமமாக ரவுண்டான ஷேப்பில் நாம் தேய்த்து அதில் ஃபோ க் கை வைத்து அங்கங்கு சிறிது ஓட்டை இடவேண்டும் ரவுண்ட் ஷேப் வருவதற்கு ஏதேனும் மூடியை மேலே வைத்து மாவை கட் செய்து எடுத்துக் கொள்ளலாம்
- 8
இப்போது ஓவன் அல்லது ஒரு பாத்திரத்தை பிரீஹீட் செய்து மூணு டு நாலு நிமிடம் பேக் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும் இதே போல் தனித்தனியாக எத்தனை பீஸ் ரவுண்டு இருக்கிறதோ அதை அனைத்தையும் பேக் செய்து தனித்தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
- 9
இப்போது கேக் கூட பேஸ் தயாராக இருக்கிறது இதற்கு நாம் விப்பிங் கிரீமை பீட் செய்து இதில் எப்போதும் போல் கேக்கை கவர் செய்யும் முறையிலேயே செய்ய வேண்டும் இதில் விப்பிங் கிரீம் பிறகு சீஸ் கிரீமையும் தனித்தனியாக பீட் செய்ய வேண்டும் இதன் உடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எஸ்டேட் பிறகு இரண்டு டேபிள் ஸ்பூன் பவுடர் சுகர் சேர்த்து அனைத்தையும் நன்கு பீட் செய்ய வேண்டும் இப்போது ஒரு பேஸ்மேல் கிரீமை அப்ளை செய்து இன்னொரு பேஸ் இன்னொரு கேக் மில் கிரீமை அப்டேட் செய்து இதே போல் முழுவதும் கம்ப்ளீட்செய்து கொள்ள வேண்டும்
- 10
இப்போது முழுமையாக கேக் தயாராகி விட்டது நாம் மீதிவைத்துள்ள அந்த மாவின் சிறிது சிறிது எக்ஸ்ட்ரா பீஸ் செய்யும் ஒரு நான்கு நிமிடம் பேக் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் அரைத்து அதை ஒரு வடிகட்டியால் மேலே அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் ஒரு அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான் ரஷ்யன் ஹனி கேக் தயாராகிவிட்டது இது மிகவும் ருசியாகவும் வித்தியாசமான இருக்கும் நீங்களும் ருசித்துப் பாருங்கள்
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட்