💓🎂🍰💚பிஸ்தா கேக்💚🍰🎂💓(pista cake recipe in tamil)

#FC
@crazycookie என் தோழி ஆனந்தியுடன் நண்பர்கள் தின போட்டியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. வெகு குறுகிய நாட்களில் மலர்ந்த நட்பு. நீண்ட நாள் பழகிய உணர்வு.
மிகுந்த இடைவேளைக்கு பிறகு COOKPAD ல் நண்பர்கள் தின போட்டியின் மூலம் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி.
💓🎂🍰💚பிஸ்தா கேக்💚🍰🎂💓(pista cake recipe in tamil)
#FC
@crazycookie என் தோழி ஆனந்தியுடன் நண்பர்கள் தின போட்டியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. வெகு குறுகிய நாட்களில் மலர்ந்த நட்பு. நீண்ட நாள் பழகிய உணர்வு.
மிகுந்த இடைவேளைக்கு பிறகு COOKPAD ல் நண்பர்கள் தின போட்டியின் மூலம் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு ஜல்லடை வைத்து அதில் கொடுத்துள்ள அளவில் மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்க்கவும்.
- 2
இதனுடன் பேக்கிங் சோடா சேர்த்து சலித்து கரண்டி வைத்து நன்றாக கலந்து விடவும்.
- 3
பிறகு ஈரமில்லாத ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மூன்று முட்டை, வெண்ணிலா எசன்ஸ் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 4
(உப்பு சேர்ப்பது முட்டையின் வாசனையை குறைப்பதற்காக)
பீட்டர் வைத்து குறைந்த அளவில் ஒரு நிமிடங்களுக்கு பீட் செய்து கொள்ளவும். - 5
பிறகு பொடித்து வைத்த சர்க்கரையை சிறிது சிறிது பாகங்களாக பிரித்து நன்றாக நுரை எழும்பி வரும் அளவிற்கு பீட் செய்து கொள்ளவும்.
இதனுடன் பிஸ்தா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். (நான் சேர்த்துள்ள இந்த பிராண்ட் எசன்ஸ் மற்றும் கலர் சேர்ந்தது) வெளிர் பச்சை நிறம் கிடைக்கும் இதை சேர்த்தவுடன். - 6
எண்ணெய் சேர்த்து முப்பது வினாடிகளுக்கு குறைவாக பீட் செய்து கொள்ளவும். (நீண்ட நேரம் பீட் செய்தால் எண்ணெய் பிரிந்து விடும்).
பிறகு சலித்து வைத்துள்ள மாவு பொருட்களை சிறிது சிறிது பாகங்களாக பிரித்து ஒன்று சேர கலக்கவும் அழுத்தம் கொடுக்காமல். இதனுடன் பால் இடைவெளி விட்டுவிட்டு சேர்த்து நன்றாக கலந்து விடவும். - 7
கலந்த கலவையை தயார் செய்து வைத்துள்ள கேக் பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.
- 8
காற்று குமிழ்களை வெளியேற செய்வதற்காக குச்சி வைத்து சமப்படுத்தி விடவும்.
பிறகு பத்து நிமிடங்கள் முன்கூட்டியே சூடு படுத்தி வைத்துள்ள ஓவனில் 40 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும். - 9
(கேக் தயாரானதும் அதை மூன்று பாகங்களாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.) தயார் செய்து வைத்துள்ள விப்ங் க்ரீமை கேக் அட்டையில் சிறிதளவு தடவவும் (கேக் நகராமல் இருப்பதற்காக) பிறகு அதில் மேல் கேக்கின் ஒரு பகுதியை வைத்து சர்க்கரை கரைசல் சேர்க்கவும். கிரீமை முழுவதுமாக தடவி அதன் மேல் பொடி செய்து வைத்துள்ள பிஸ்தா பருப்பு சேர்க்கவும்.
- 10
அதற்கு மேல் வெள்ளை சாக்லேட்டை துருவி சேர்க்கவும். கூடுதல் சுவைக்கு கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கொள்ளவும். மூன்று பாகங்களையும் இதே போல் தயார் செய்து கிரீம் சேர்த்து ஃப்ரிட்ஜில் 30 நிமிடங்களுக்கு வைக்கவும்.
- 11
பிரியாணி போன்ற கேக் செய்வதற்காக நான் நடு பாகத்தில் சிறிதளவு வெட்டி எடுத்துள்ளேன். வெள்ளை சாக்லேட் வைத்து மஞ்சள் மற்றும் வெள்ளை நிற அரிசி போன்று செய்து வைத்துள்ளேன்.
- 12
பானை போன்ற உருவம் கொடுப்பதற்காக வெளிப்பாகத்திற்கு கிரீமில் கலர் சேர்த்து அலங்கரித்துள்ளேன். அதற்கு மேல் நான் தயார் செய்து வைத்துள்ள சாக்லேட்டுகளை மேலே சேர்த்து அரிசி போன்று காட்சிப்படுத்தியுள்ளேன்.
- 13
பிரியாணி கேக்கிற்கு சைடிஷ் ஆக சிக்கன் 65 செய்வதற்கு கேக்கின் ஒரு பகுதியை சிறு சிறு பாகங்களாக வெட்டி அதில் சிறிதளவு கன்டென்ட் சிம்பிள் மற்றும் கலர் சேர்த்து வைத்துள்ளேன்.
- 14
சிக்கன் லெக் பீஸ் செய்வதற்கு கேக் நன்றாக பிசைந்து கண்டன்ஸ்டு மில்க் மற்றும் கலர் சேர்த்து உருவம் கொடுத்துள்ளேன்.
- 15
இப்பொழுது கேக்கிற்கு தயாரான சிதே டிஷ் அனைத்தும் தயார். சிக்கன் 65 பச்சை மிளகாய் சிக்கன் லெக் பீஸ். வெங்காய பச்சடி செய்வதற்கு ஒரு கப்பில் கிரீமை எடுத்து பூசி தயிர் போன்ற பிம்பம் கொடுத்துள்ளேன். (சாக்லேட்டை வைத்து முட்டை செய்த படம் மிஸ் ஆகிவிட்டது)
- 16
இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள அனைத்தையும் கேட்பதற்கு மேலே அலங்கரித்து கொள்ளவும்.
- 17
சுவையான பிஸ்தா கேக் பிரியாணி போன்ற உருவில் சைடிஷ்களுடன் சுவைக்க தயார்.
- 18
குழம்பும் அளவிற்கு வித்தியாசமான தோற்றத்தில் அருமையான சுவையில் பிஸ்தா கேக் தயார். 💚💓🎂🍰💕
Keywords
Similar Recipes
More Recipes












































கமெண்ட் (7)