இன்ஸ்டன்ட் இடியாப்பம்🥢(instant idiyappam recipe in tamil)

#FC @crazycookie என் தோழி ஆனந்தி பாயா செய்ய நான் அதற்கு மேட்ச் ஆக நான் இடியாப்பம் செய்தேன்.
இன்ஸ்டன்ட் இடியாப்பம்🥢(instant idiyappam recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தி பாயா செய்ய நான் அதற்கு மேட்ச் ஆக நான் இடியாப்பம் செய்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
நான் இன்ஸ்டன்ட் இடியாப்பம் மாவு வைத்து செய்துள்ளேன். இதை வறுக்க தேவையில்லை அப்படியே உபயோகப்படுத்தலாம்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் இடியாப்ப மாவு மற்றும் தேவையான அளவு உப்பு
சேர்த்துக் கொள்ளவும். - 2
பிறகு நன்றாக கைகளால் பிசைந்து கொடுக்கவும். பின் கொதி நிலையில் உள்ள வெந்நீரை சிறிது சிறிதாக சேர்த்து கரண்டி வைத்து கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
பிசைந்த மாவை பத்து நிமிடங்களுக்கு அப்படியே மூடி போட்டு மூடி வைக்கவும்.
- 4
10 நிமிடங்களுக்கு பிறகு கைகளால் பிசையவும். (கைகளில் மாவு ஒட்டுவது போல் இருந்தால் சிறிதளவு எண்ணெய் தேய்த்து கொள்ளலாம்)
இடியாப்பத்திற்கு என்று சிறிது சிறிது துளைகளாக இருக்கும் அச்சை நான் எடுத்துள்ளேன்.
- 5
பிறகு பிசைந்த மாவை படத்தில் காட்டியவாறு இடியாப்ப அச்சில் சேர்க்கவும்.
- 6
இரண்டு கைகளால் நன்றாக அழுத்தும் கொடுத்து இட்லி தட்டில் சேர்க்கவும். நான் சிறிய வடிவங்களாக செய்துள்ளேன். இடியாப்பத்தை வேக வைப்பதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
- 7
பத்து நிமிடங்கள் வேக வைத்த எடுத்தால் மிருதுவான இன்ஸ்டன்ட் இடியாப்பம் சுவைக்க தயார்.
- 8
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் எளிதில் ஜீரணிக்க கூடிய ஒரு உணவு.
- 9
இடியாப்பம் பாயா என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. சிலர் தேங்காய் பாலுடன் உண்ண விரும்புவார்கள்.
என் தோழியுடன் இதை சேர்ந்து செய்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. - 10
Keywords
Similar Recipes
More Recipes

























கமெண்ட் (5)