ஹாட் சாக்லேட் கேக்
ரொம்ப சுலபமாக செஞ்சிடலாம்
30-40 நிமிடத்தில் செஞ்சி அசத்துங்க
சமையல் குறிப்புகள்
- 1
அடிகனமான பேனில் சிறிது எண்ணெய் தடவி முட்டை சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
- 2
முட்டையுடன் பொடித்த சர்க்கரை,மைதா, உப்பு,1/4 கப் பால், கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா 1/2 கப் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து அடுப்பில் வைத்து மூடி போட்டு சிம்மில் 10 நிமிடம் வைக்கவும்
- 3
அடுப்பில் தோசை கல்லை வைத்து 5 நிமிடம் நன்றாக சூடான பின் கேக் பாத்திரத்தை தோசை கல் மீது வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும் மிதமான தீயில்.
- 4
ஒரு போர்க் வைத்து குத்தி பார்த்து எதுவும் ஒட்டாமல் இருந்தால் அடுப்பை அணைக்கவும்
- 5
சாக்லேட் சிரப் செய்வதற்கு பாத்திரத்தில் 2 ஸ்பூன் பட்டர், சர்க்கரை கொக்கோ பவுடர், பால் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும்.
- 6
சிரப் பதம் வந்ததும் இறக்கவும்
- 7
கேக் ஆறிய பின் ஒரு தட்டில் மாற்றி போர்க்கில் அங்கு அங்கு குத்தி விட்டு கேட்கின் மேல் சிறிது பாலை ஊற்றவும்
- 8
சாக்லேட் சிரப் கேட்கின் மேல் உற்றி, (பாதாம் பவுடர் தூவி,சாக்கோ சிப் சேர்த்து)சூடாக பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes





கமெண்ட்