ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)

ஈசியா செய்திடலாம்
குக்கர், ஓவன் தேவை இல்லை
ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
ஈசியா செய்திடலாம்
குக்கர், ஓவன் தேவை இல்லை
சமையல் குறிப்புகள்
- 1
அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் தடவவும்
- 2
முட்டை,1/2 கப் பால்,சர்க்கரை, மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,உப்பு சேர்த்து நன்றாக பீட் செய்யவும். ஓரங்களை வழித்து விட்டு அடுப்பில் வைத்து,மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 3
இன்னொரு அடுப்பில் தோசைக்கல்லை நன்றாக சூடாக்கவும்.கேக் கலவையை தோசைக்கல்லில் வைத்து 5 நிமிடம் வேகவைக்கவும்
- 4
தீயை அணைந்து 3 நிமிடம் கழித்து திறந்து ஒரு போர்க் விட்டு பார்க்கவும்.எதுவும் ஒட்டவில்லை என்றால் கேக் ரெடி. ஆற விடவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் பட்டர் பொடித்த சர்க்கரை கோகோ பவுடர் பால் சேர்த்து நன்றாக கிளறவும். சாக்லேட் சாஸ் பதம் வந்ததும் அடுப்பை ஆஃப் செய்யவும்
- 6
கேக்கை தட்டில் மாற்றி கேக்கின் மேல் ஃபோர்க்கால் (🍴) குத்தி விட்டு மீதம் இருக்கும் 1/2 கப் பாலை கேக்கின் மேல் ஊற்றவும். சாக்லேட் சாஸ் ஊற்றவும்.10 பாதாமை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி கேக்கின் மேல் தூவவும். சாகோ சிப் அல்லது செர்ரி வீட்டில் இருந்தால் மேலே சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes







கமெண்ட்