சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
6-8 பரிமாறுவது
  1. 1 கப் மைதா
  2. 1/4 கப் கொக்கோ பவுடர்
  3. 1 டேபிள்ஸ்பூன் காபித்தூள்
  4. 2 முட்டை
  5. 1/2 கப் எண்ணெய்
  6. 1/2 கப் பால்
  7. 1 கப் சர்க்கரை
  8. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  9. 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  10. சிறிதுவெனிலா எசன்ஸ்
  11. சாக்லேட் கிரீம் செய்ய
  12. 150 கிராம் டார்க் சாக்லேட்
  13. 100 மிலி ஃப்ரெஷ் க்ரீம்
  14. ஒயிட் சாக்லேட் கிரீம் செய்ய
  15. 100 ஒயிட் சாக்லேட்
  16. 50 மிலி ஃப்ரெஷ் க்ரீம்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    அகலமான பாத்திரத்தில் முட்டையை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும் பிறகு இதனுடன் எண்ணெய், பால் சேர்த்து ஒன்றோடு ஒன்று கலக்கவும்

  2. 2

    இத்துடன் சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து சர்க்கரை நன்றாக கரையும் வரை கலக்கவும்

  3. 3

    மேல் சல்லடை வைத்து மைதா மாவு, கொக்கோ பவுடர்,காபித்தூள்

  4. 4

    மற்றும் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலக்கவும்

  5. 5

    பட்டர் சீட்டை வைத்து தயாரித்து வைத்திருக்கும் கலவையை அதில் ஊற்றி காற்று அடைப்பை நீக்க இரண்டு முறை தட்டவும்... அவனில் 180 டிகிரி செல்சியஸில் ப்ரீ ஹிட் செய்து 40 நிமிடம் வைக்கவும்

  6. 6

    கேக்கை அவனிலிருந்து எடுத்து சூடாக இருக்கும் பொழுதே அதன்மேல் பாலை தேய்த்து துணியால் மூடி ஆறவிடவும்

  7. 7

    சாக்லேட் கிரீம் செய்ய சாக்லேட் ஃப்ரெஷ் க்ரீம் நன்றாக கலந்து அவனில் 20 நொடிகள் வைத்து நன்றாக கலந்து கிரீம் போல செய்து கொள்ளவும் (இந்தக் கலவை பார்ப்பதற்கு தண்ணீர் போல் இருந்தாலும் நேரம் சிறிது ஆக கெட்டியாகிவிடும்)

  8. 8

    கேக்கை சரிசமமாக இரண்டாக வெட்டிக் கொள்ளவும் ஒரு பகுதியில் சர்க்கரை பாகை தேய்த்துக் கொள்ளவும் பிறகு இதன் மேல் தயாரித்து வைத்திருக்கும் சாக்லேட் கிரீம் எல்லா இடங்களிலும் பரவுமாறு தேய்த்துக் கொள்ளவும்

  9. 9

    மற்றொரு பகுதியை இதன் மேல் வைத்து மீண்டும் சர்க்கரை பாகை இதன் மேல் தேய்த்து சாக்லேட் கிரீம் எல்லா இடங்களிலும் முழுவதும் பரவுமாறு தேய்த்துக்கொள்ளவும்... இப்போது இதனை பிரிட்ஜில் 30 நிமிடம் வைக்கவும்

  10. 10

    ஒயிட் சாக்லேட் செய்ய, ஒயிட் சாக்லேட் ஃப்ரெஷ் கிரீமி நன்றாக கலந்து அவனில் 20 நொடிகள் வைக்கவும் இப்போது முன்பு செய்த சாக்லேட் கிரீம் தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும் அப்போது இதன் மேல் ஒயிட் சாக்லேட் கிரீம் தேய்த்து மீண்டும் 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்...

  11. 11

    இறுதியாக மீண்டும் இதன்மேல் சாக்லெட் சாற்றில் சிறிது சுடு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து இதில் ஊற்றி விருப்பப்பட்ட வடிவில் டிசைன் செய்து கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes