பேரரசர் ஆப்பம் / Emperor's hopper / கருப்பு கவுணி அரிச ஆப்பம்

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#nutrition
#npd1
ஊட்டச்சத்து மிகுந்த கருப்பு கவுணி அரிசியில் அந்தோசயினின் எனும் ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதால் இதய நோயை தடுக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் பயன்படுகிறது.
ஒவ்வொரு 1/2 கப் அரிசியிலும் 3 கிராம் நார்ச்சத்த நிறைந்துள்ளது.இதனால் குடல் அசைவுகளை செரிக்க பயன்படுகிறது, மலச்சிக்கல் பிரச்சினையை குணப்படுத்த உதவுகிறது, வயிற்றுப்போக்கு மற்றும் குடல் வீக்கம் போன்ற பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
குண்டான உடலை குறைப்பதற்கு இந்த கருப்பு கவுணி அரிசி ஒரு சிறந்த உணவாகும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
7 பேர்
  1. 2 கப்கருப்பு கவுணி அரிசி சோறு -
  2. 2 கப்பச்சரிசி -
  3. 1 மேஜைக்கரண்டிஉளுந்து -
  4. ஆப்ப மாவு கரைசல்
  5. 15 குழிக்கரண்டிகள்கவுணி அரிசி ஆப்பமாவு -
  6. 1முட்டை -
  7. 1 குழிக்கரண்டிதேங்காய் கட்டிப்பால் -
  8. 2 தேக்கரண்டிஎண்ணெய் -
  9. தேவைக்கேற்பஉப்பு -
  10. 1 சிட்டிகைசோடா உப்பு -
  11. 5 குழிக்கரண்டிகள்தண்ணீர் -

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் நன்றாக ஊற வைத்த பச்சரிசியை உளுந்துடன் சேர்த்து அரைத்து பின்பு அத்துடன் கருப்பு கவுணி அரிசி சோறு போட்டு நன்றாக அரைக்கவும். இக் கலவையை நன்றாக கையால் கலக்கிவிட்டு மூடிப்போட்டு வைத்து விடவும்.8 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு நன்றாக பொங்கி, சிறிதளவு புளித்திருக்கும்.இனி ஆப்ப மாவு கலவை செய்யலாம்.

  2. 2

    8 குழிக்கறண்டி புளித்த ஆப்பமாவுடன் 1 முட்டை, தேங்காய் கட்டிப்பால் 1குழிக்கரண்டி, உப்பு தேவையான அளவு, சோடா உப்பு 1 சிட்டிகை, தண்ணீர் 5 குழிக்கரண்டிகள், எண்ணெய் 2 தேக்கரண்டி ஆகியவற்றை சேர்த்து கலக்கி வைக்க வேண்டும்.

  3. 3

    10 நிமிடம் கழித்தப்பின்பு ஆப்பம் சுட்டெத்தால், சுவையான, ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிகுந்த பேரரசர் ஆப்பம் தயார்.இந்த கருப்பு கவுணி அரிசி மிகவும் ஊட்டச்சத்து மிகுந்தது அதனால் தான் இதனை எம்பரர்ஸ் ரைஸ் என்று அழைப்பர்.இந்த அரிசியை முந்தைய காலத்தில் சீனாவில் அரசர்களுக்கு மற்றுமே பயன்படுத்தினார்களாம் ஆகையால் தான் இதற்கு இந்த பெயர் வைத்தார்களாம். இதற்கு ஃபார்பிடன் ரைஸ் என்ற பெயரும் உண்டு காரணம் சாதாரண மக்களுக்கு இதை தடை செய்யப்பட்டிருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
அன்று

Similar Recipes