தக்காளி 🍅 பிரியாணி

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#தக்காளிசெய்முறை

தக்காளி 🍅 பிரியாணி

#தக்காளிசெய்முறை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தேவையானபொருட்கள்
  2. 2 கப்பாசுமதி அரிசி (or) சீரக சம்பா அரிசி
  3. 2வெங்காயம்
  4. 6 அரைத்ததுதக்காளி
  5. ஒன்றுபச்சை மிளகாய்
  6. 50 கிராம்கேரட், பீன்ஸ்
  7. 1 1/2 ஸ்பூன்வற்றல்தூள்
  8. தேவைக்கேற்ப‌உப்பு
  9. ஒரு கைப்பிடிபுதினா, கொத்தமல்லி
  10. ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  11. 2 ஸ்பூன்எண்ணெய்
  12. 1 ஸ்பூன்நெய்
  13. சிறு துண்டுபட்டை
  14. 2கிராம்பு
  15. ஒன்றுஏலக்காய்
  16. ஒன்றுபிரிஞ்சி இலை
  17. பொடிக்க‌:
  18. 10மிளகு
  19. 1/2 ஸ்பூன்சீரகம்
  20. 1/2 ஸ்பூன்பெருஞ்சீரகம்
  21. 1 ஸ்பூன்மல்லிவிதை

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற‌ வைக்கவும். மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்

  3. 3

    பின்னர் வதக்கியவற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் சிவந்த்தும் தக்காளி விழுது சேர்த்து வதங்கியதும் கேரட், பீன்ஸ், ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

  5. 5

    காய்கறிகளுடன் வற்றல்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
    பின்னர் புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.

  6. 6

    அடுப்பை மிதமான தீயில் வைத்து ஊற‌ வைத்த‌ அரிசியை சேர்த்து மெதுவாக‌ அரிசி உடைந்து விடாமல் கிளறவும்.

  7. 7

    அதில் தேவையான‌ தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி பொடி செய்த மிளகு, சீரகத்தை சேர்க்கவும். (தண்ணீரின் அளவு பாசுமதி (அ) சீரக சம்பா ஒரு கப்பிற்கு 1 1/2 கப் என்றும், நன்கு கிளறி விட்டு குக்கரை மூடி தீயை அதிகமாக‌ வைக்கவும்.

  8. 8

    குக்கரில் ஆவி வரும் போது சிம்மில் வைத்து ஆவி அடங்கியதும் திறந்து கரண்டியால் அடி வரை நன்கு கிளறி மீண்டும் மூடி தீயை அதிகமாக‌ வைத்து வெயிட் போடவும். ஒரு விசில் வந்தவுடன் இறக்கி விடவும்.

  9. 9

    சூடான‌ சுவையான‌ தக்காளி பிரியாணி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes