கல்யாணவீட்டு மட்டன் சால்னா (mutton Salna Recipes in Tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

கல்யாணவீட்டு மட்டன் சால்னா (mutton Salna Recipes in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 பரிமாறுவது
  1. 2 3/4 கிலோமட்டன்
  2. 500 கிலோவெங்காயம்
  3. 500 கிலோதக்காளி
  4. 75 கிராம்இஞ்சி
  5. 50 கிராம்பூண்டு‌
  6. 5 கிராம்பட்டை ஏலம் கிராம்பு
  7. 1/2 கட்டுகொத்தமல்லி இலை புதீனா
  8. தேவைக்கு ஏற்பமிளகாய்
  9. 2தேங்காய்
  10. 50 கிராம்முந்திரி
  11. 250 மிலிஎண்ணெய்
  12. 1/4 லிதயிர்
  13. 20 கிராம்மஞ்சள் தூள்
  14. 25 கிராம்சீரகத்தூள்
  15. 10 கிராம்சோம்பு தூள்
  16. 5 கிராம்மிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மட்டனை சுத்தம் செய்து தண்ணீர் வடிந்து விட்டு தயிர் அரைத்த இஞ்சி பூண்டு விழுது சீரகத்தூள் சோம்பு தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    தேங்காயை முந்திரி சேர்த்து நல்ல அரைத்து கொள்ளவும்.வெங்காயம் மெல்லியதாக நீலமாக வெட்டி கொள்ளவும்.

  3. 3

    ஒரு‌ பெரிய பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறியதும் 1 தேக்கரண்டியளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின்னர் மிளகாய்த்தூள் சேர்த்து நறுக்கிய தக்காளி கொத்தமல்லி இலை, புதீனா, மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    5 நிமிடம் கழித்து ஊற வைத்த கறி சேர்த்து எண்ணெய் உடன் கிலறி விடவும்.

  6. 6

    கறி வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கறியை நன்றாக வேக விடவும்.

  7. 7

    கறி வேக 1 மணி‌ நேரத்தில் இருந்து 1 1/2 மணி நேரம் எடுத்து கொள்ளும்‌.

  8. 8

    கறி நன்கு வெந்ததும் அரைத்து வைத்த தேங்காய் முந்திரி விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

  9. 9

    தேங்காய் கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes