மாம்பழம் பன்னாகோட்டா

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

மாம்பழம் பன்னாகோட்டா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. மாம்பழம்-4(தோல் நீக்கி, வெட்டி கொள்ளவும்)
  2. தண்ணீர்-1 கப்
  3. சர்க்கரை-2 டேபிள் ஸ்பூன்
  4. ஜெலடின்-1 டீஸ்பூன்
  5. வெள்ளை பன்னக்கோட்ட செய்வதற்கு:
  6. பால்-1 1/2 கப்
  7. பொடித்த சர்க்கரை-1/3 கப்
  8. ஜெலடின்-2 டீஸ்பூன்
  9. வெண்ணிலா எஸ்ஸென்ஸ்-1/4 டீஸ்பூன்
  10. திக் கிரீம்-1 கப்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் மாம்பழம் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு பௌலில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி,ஜெலடினை அதில் சேர்த்து கலந்து,5 நிமிடம் ஊற வைக்கவும்.

  3. 3

    அரைத்த மாம்பழ விழுதை,ஜெலடின் கலவையோடு சேர்த்து கலந்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு கண்ணாடி க்ளாஸ்ஸை சாய்ந்த மாதிரி வைத்து இதை ஊற்றவும்.

  5. 5

    2 மணி நேரம் பிரிஜில் வைக்கவும்

  6. 6

    ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் ஜெலடின் சேர்த்து மிதமான சூட்டில் காய்ச்சி கொள்ளவும்.(கொதிக்க விட வேண்டாம்)

  7. 7

    பின் அதில் பொடித்த சர்க்கரை சேர்த்து,2 நிமிடம் கலந்து கொள்ளவும்.

  8. 8

    பின்பு அதில் கிரீம் மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.

  9. 9

    சூடு குறைந்தது மாம்பழ கலவையை ஊற்றிய கண்ணாடி கிளாசில் ஊற்றி 3 மணி நேரம் பிரிஜில் வைத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes