தேவையான பொருட்கள்

  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 7பல் பூண்டு
  5. 1 இச் இஞ்சி
  6. 1 கேரட்
  7. 1 கப் பச்சை பட்டாணி
  8. சிறிதளவுமல்லி இலை
  9. சிறிதளவுபுதினா இலை
  10. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  12. 1/4 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  13. சிறிதளவுசோம்பு
  14. சிறிதளவுகடுகு
  15. 3ஸ்பூன் எண்ணெய்
  16. சிறிதளவுநெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.அதை உருண்டையாக 1/2 மணி நேரம் வைக்கவும்.

  2. 2

    தேவையான காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்த்துநன்கு 2நிமிடங்கள் வதக்கவும்.

  5. 5

    அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு 3 நிமிடங்கள் வதக்கவும்.

  6. 6

    பின்பு கேரட், பச்சை பட்டாணி, மல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து 5 நிமிடங்கள் வாணலியை மூடி வதக்கவும்.

  7. 7

    எண்ணெய் பிரிந்ததும் கலவையை எடுத்து வைத்து கொள்ளவும்.

  8. 8

    இப்போது சப்பாத்தி மாவுயை திரட்டி அதில் லேசாக நெய்யை தேத்து கொள்ளவும்.

  9. 9

    இப்போது வடது மற்றும் இடது பக்கம் மடித்து கொள்ளவும்.

  10. 10

    நடுவில் கலவையை வைத்து மேல் மற்றும் கீல் பக்கம் மடித்து கொள்ளவும்.

  11. 11

    இப்போது தாவாயில் லேசாக நெய்யை தேத்து கொள்ளவும்.பின்பு பப்ஸ்யை இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

  12. 12

    இப்போது சூடான கோதுமை வைஜ் பப்ஸ் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

KalaiSelvi G
அன்று

Similar Recipes