வடகம் தேங்காய் குழம்பு

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#lockdown2 இந்த ஊரடங்கு சூழ்நிலையில் காய் இல்லையெனில் கவலைப்படாமல் இந்த வடகத்தை குழம்பு வச்சு பாருங்க சூப்பரா இருக்கும்.

வடகம் தேங்காய் குழம்பு

#lockdown2 இந்த ஊரடங்கு சூழ்நிலையில் காய் இல்லையெனில் கவலைப்படாமல் இந்த வடகத்தை குழம்பு வச்சு பாருங்க சூப்பரா இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. ஒரு கப் கறி வடகம்
  2. 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
  3. 1/2டீஸ்பூன் கடுகு
  4. 1காய்ந்த மிளகாய்
  5. கருவேப்பிலை
  6. 4 பல் பூண்டு
  7. 10 பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
  8. 1டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. மஞ்சள்தூள் சிறிதளவு
  11. புளி எலுமிச்சை அளவு
  12. அரை டீஸ்பூன் வெல்லம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    துருவிய தேங்காயைப் வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். மிதமான தீயில் எண்ணெய் காயவைத்து கறி வடகத்தை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, காய்ந்த மிளகாய்,கருவேப்பிலை தாளித்து,பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் வதங்கியதும் தேவைக்கேற்ப உப்பு மஞ்சள் தூள் சாம்பார் பொடி சேர்த்து வதக்கி அதில் கரைத்த புளியை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். குழம்பில் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    புளி நன்கு கொதித்து பச்சை வாசனை போனவுடன்,வறுத்த தேங்காய் மற்றும் பொரித்த வடகத்தை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவைத்து வெல்லம் சேர்த்து அடுப்பை அணைத்தாள் சுவையான வடகம் தேங்காய் குழம்பு ரெடி.

  5. 5

    பொட்டுக்கடலை பூண்டு காய்ந்த மிளகாய் உப்பு சேர்த்து அரைத்த துவையலை சாதத்தில் பிசைந்து,இந்த குழம்பை ஊற்றி சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
don't know the thuvaiyal combination and I used to take appalam only as see dish for this gravy.will try that too tomorrow

Similar Recipes