தேவையான பொருட்கள்

6 பரிமாறுவது
  1. 450 கிராம் சேமியா
  2. இரண்டு பெரிய வெங்காயம்
  3. ஒரு தக்காளி
  4. இரண்டு பச்சை மிளகாய்
  5. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. ஒரு ஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  7. கால் ஸ்பூன் மஞ்சள்தூள்
  8. கால் ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  9. இரண்டு ஸ்பூன் தயிர்
  10. தேவையானஅளவு உப்பு
  11. ஒரு கைப்பிடி புதினா இலை
  12. ஒரு கைப்பிடி மல்லி இலை
  13. ஒரு பட்டை
  14. ஒரு ஏலக்காய்
  15. 2 லவங்கம்
  16. ஒரு கேரட்
  17. 10 பீன்ஸ்
  18. மூணு ஸ்பூன் எண்ணெய்
  19. 900ml தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    இப்போது கேரட் பீன்ஸ் மல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து நன்கு 5 நிமிடம் எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

  4. 4

    அத்துடன் தக்காளி தயிர் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்கவும்.

  5. 5

    இப்போது தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் சேமியாவை சேர்த்து கொள்ளவும்.

  6. 6

    5 நிமிடம் மிதமான தீயில் மூடி சேர்த்து வேகவைத்து எடுத்து இறக்கி சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

KalaiSelvi G
அன்று

Similar Recipes