Fruit Salsa🥝🍊🍎with Sprouts & Nuts

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#immunity

கிவி,ஆப்பிள் மற்றும் ஆரஞ்சில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் நிறைய உள்ளது.
கிவி:- கிவி பழத்தில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், குளோரைடு, காப்பர், குரோமியம், ஃப்ளூரைடு, அயோடின், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், ஜிங்க் போன்றவை அடங்கியுள்ளது.
ஆப்பிள்:- தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதினால் நாம் மருத்துவரை நாடவேண்டிய அவசியம் இருக்காது.
ஆரஞ்சு:- வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சுப் பழமானது, உடலில் உள்ள செல்களின் நோயெதிப்பு சக்தியை அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காதவாறு பாதுகாக்கும்.
முளைகட்டிய பச்சைப் பயிறு:- அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும். அல்சரைக் கட்டுப்படுத்தும். சருமப் பளபளப்புக்கு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான காலை சிற்றுண்டி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கிவி பழம்
  2. 1ஆப்பிள்
  3. 1ஆரஞ்சு பழம்
  4. 1/2 கப் முளைகட்டிய பச்சைப் பயிறு
  5. 1அத்திப்பழம்
  6. 2பேரீச்சம்பழம்
  7. 2 பாதாம்
  8. 2 முந்திரி
  9. உப்பு ஒரு சிட்டிகை
  10. 1டேபிள்ஸ்பூன் சாக்லெட் சிரப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அனைத்து பழங்கள் மற்றும் நட்ஸ் ஐ சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    அறிந்து வைத்த பழங்களை ஒரு பவுலில் மாற்றி, அதனுடன் முளைக்கட்டிய பயிறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  3. 3

    நறுக்கிய முந்திரி மற்றும் பாதாமை மேலே தூவி விடவும். சாக்லேட் சிறப்பை மேலே ஊற்றி பரிமாறவும்.

  4. 4

    முந்திரி,பாதாம்,பேரிச்சம் பழம்,அத்திப்பழம் இவைகளுடன் சாக்லேட் சிறப்பும் சேர்த்து கலந்து உள்ளதால் குழந்தைகளை எளிதில் கவரும். விரும்பி உண்ணுவர்.😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes