கேரட் ஸ்வீட் இடியாப்பம்#carrot #book

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

மாத்தியோசி இடியாப்பம் மாவுடன் கேரட், கலர்ஃபுல் கேரட் இடியாப்பம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
மூன்று பேருக்கு
  1. பச்சரிசி மாவு ஒன்றரை கப்
  2. கேரட் 3
  3. தேங்காய்த் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. முந்திரி ஆறு
  5. நாட்டுச் சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன்
  6. ஏலக்காய் தூள் 2 சிட்டிகை
  7. உப்பு ஒரு சிட்டிகை

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    முதலில் பச்சரிசி மாவை சிறிது வறுத்துக்கொள்ளவும். அதில் வேக வைத்த கேரட்டை மிக்ஸியில் அடித்து சேர்க்கவும்.. தேவையெனில் சிறிது சுடு தண்ணீர் ஊற்றலாம். அல்லது வேக வைத்த கேரட்டின் தண்ணீரையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

  2. 2

    மசித்த கேரட்டையும் அரிசி மாவையும் நன்றாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை இடியாப்ப பிடியில் போட்டு இட்லி தட்டில் இடியாப்பம் போல் பிழியவும். 5 லிருந்து 10 நிமிடம் வேக விடவும். அனைத்தையும் ஆற விட்டு, உதிர்த்து கொள்ளலாம்.

  3. 3

    வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி தேங்காய் துருவல் ஏலக்காய்த்தூள் சேர்த்து பிழிந்த கேரட் இடியாப்பத்தை சிறிது சூடாக்கவும். அடுப்பை அனைத்து நாட்டுச்சர்க்கரை, மற்றும் உப்புசேர்த்து பரிமாறலாம். குழந்தைகள் விரும்பி உண்பர் கலர்ஃபுல் இடியாப்பம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes