செட்டிநாடு முந்திரி மட்டன் குழம்பு (Mutton kulambu Recipe in Tamil)

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#book
#nutrient
கடையில் மட்டன் குழம்பு வாங்க முடியாததால் நாங்கள் வீட்டிலேயே மட்டன் குழம்பு செய்தோம். மிகவும் அருமையாக இருந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கி மட்டன்
  2. தாளிக்க
  3. 10சின்ன வெங்காயம
  4. 1பெரிய வெங்காயம்
  5. 1 ஒரு பெரிய தக்காளி
  6. 1 பட்டை
  7. 2 லவங்கம்
  8. 1பிரிஞ்சி இலை
  9. அரைக்க
  10. 4 ஸ்பூன் கொத்தமல்லி
  11. 1 ஸ்பூன் சீரகம்
  12. 1 ஸ்பூன் சோம்பு
  13. 1 பட்டை
  14. 2 ஏலக்காய்
  15. 6 வரமிளகாய்
  16. 15சின்ன வெங்காயம்
  17. 1 மூடி துருவிய தேங்காய்
  18. 3லவங்கம்
  19. 6 முந்திரி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் அரைக்க தேவையான பொருட்களை வறுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி, சீரகம், மிளகு, சோம்பு, ஏலக்காய், வர மிளகாய், பட்டை, லவங்கம் அனைத்தையும் போட்டு வறுத்துக் கொள்ளவும். அது சற்று வதங்கியதும் அதிலேயே வெங்காயத்தையும் போட்டு மீண்டும் வறுத்துக் கொள்ளவும்

  2. 2

    வறுத்த அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    மறுபடியும் தாளிக்க வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, போட்டு சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் மீதம் இருப்பதையும் போட்டு நன்றாக வதக்கவும். சிறிது வதங்கியதும் அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

  4. 4

    நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்

  5. 5

    மட்டனை நன்றாக கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும். சிறிது மஞ்சள் தூளும் போட்டு கழுவி கொள்ளவும். இஞ்சி-பூண்டு பச்சை வாசனை போன பிறகு கறியையும் போட்டு உப்பு மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கவும். கால் டம்ளர் தண்ணி ஊத்தி அதை மூன்று சத்தம் விடவும்

  6. 6

    சத்தம் அடங்கியதும் அதில் அரைத்து வைத்து கலவையை ஊற்றி கொதிக்கவிடவும் நன்றாக கொதி வந்த பிறகு சிம்மில் வைத்து எண்ணெய் பிரியும் வரை விடவும் பிறகு மேலே கருவேப்பிலை கொத்தமல்லி தழை போட்டு அலங்கரிக்கவும் மட்டன் குழம்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes