ஓட்ஸ் லட்டு (Oats laddu Recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

ஓட்ஸ் லட்டு (Oats laddu Recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 1கப் சப்போல்லோ ஓட்ஸ்
  2. 3/4கப் தேங்காய் துருவல்
  3. 1/4கப் வேர்கடலை
  4. 6_8 பேரிச்சம் பழம்
  5. 10முந்திரி
  6. 10பாதாம்
  7. 10திராட்சை
  8. 4ஏலக்காய்
  9. 1_1/2 கப் வெல்லம்
  10. 1டேபிள்ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்

  2. 2

    அடுப்பில் ஒரு ஃபேனை வைத்து சூடானதும் மெல்லிய தீயில் முந்திரி பாதாம் பிஸ்தா ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் போடவும் பின் வேர்கடலை ஐ சேர்த்து வறுத்து மிக்ஸியில் போடவும்

  3. 3

    பின் தேங்காய் துருவல் சேர்த்து லைட் ப்ரவுன் நிறத்தில் வறுத்து மிக்ஸியில் போடவும் பின் அதனுடன் பேரிச்சம் பழம் மற்றும் ஏலக்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்

  4. 4

    அதே ஃபேனை சற்று சூடு ஆறியதும் ஓட்ஸ் ஐ சேர்த்து மெல்லிய தீயில் மணம் வர வறுத்து எடுக்கவும் தேங்காய் வறுத்த சூட்டிலே போட்டா ஓட்ஸ் தீய்ந்து விடும் வறுபடாது அதனால் சற்று ஆறவிட்டு திரும்ப அடுப்பில் வைத்து வறுத்து எடுக்கவும் பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்

  5. 5

    வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விடவும்

  6. 6

    வெல்லம் பாகு பதம் வந்ததும் (சிறிது தண்ணீரில் பாகை விட்டு கைகளில் தொட்டு உருட்டினால் ஒட்டாமல் உருட்ட வருவது பதம்) பொடித்து மற்றும் அரைத்து வைத்துள்ள ஓட்ஸ் தேங்காய் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்

  7. 7

    வெல்ல பாகுடன் எல்லாம் சேர்ந்து வந்ததும் நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கி ஆறவிடவும்

  8. 8

    சற்று ஆறியதும் கைகளில் நெய் தடவி கொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும் குக்கீஸ் அச்சில் சிறிது நெய் தடவி இந்த கலவையை அழுத்தி விரும்பிய வடிவில் செய்யலாம் சுவையான ஆரோக்கியமான ஓட்ஸ் லட்டு ரெடி

  9. 9

    சுவையான ஆரோக்கியமான ஓட்ஸ் லட்டு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes