பிஸ்கட் கப் கேக் (Biscuit cup cake recipe in tamil)

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
Dharmapuri

பிஸ்கட் கப் கேக் (Biscuit cup cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2பேர்
  1. 2 பாக்கெட் போர்பன் பிஸ்கட்
  2. 1 பாக்கெட் ஓரியோ பிஸ்கட்
  3. 4சாக்லேட் துண்டுகள்
  4. 1/2டீ ஸ்பூன் சோடா உப்பு
  5. 1/2 கப் பால்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    இரண்டு பாக்கெட் போர்பன் பிஸ்கட் துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக தூள் செய்து கொள்ளவும். அதனை ஒரு பௌலில் சேர்த்து அதனுடன் அரை கப் பால் மற்றும் சோடா உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கரைக்கவும்.

  2. 2

    சிறிய கிண்ணங்களை எண்ணை தடவி எடுத்துக் கொள்ளவும். அதனுள் ஓரியோ பிஸ்கெட்டை முதலில் வைத்து அதன்மேல் மூழ்கும் அளவிற்கு கரைத்து வைத்துள்ள கேக் கலவையை சேர்க்கவும்.சிறிது சேர்த்தவுடன் ஒரு துண்டு சாக்லெட்டை வைத்து மீண்டும் அதன்மேல் கொஞ்சம் கேக் கலவையை சேர்க்கவும். கப்பிற்கு 3/4 அளவுதான் கேக் கலவை இருக்க வேண்டும்.

  3. 3

    படத்தில் உள்ளபடி முக்கால் பாகம் கேக் கலவை ஊற்றிக் கொள்ளவும். பின்பு அதனை லேசாக இரண்டு தட்டு தட்டி வைக்கவும். கடாயில் ஒரு ஸ்டாண்டை வைத்து அதன்மேல் தட்டை வைத்து மூடி பத்து நிமிடம் ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும்.

  4. 4

    பத்து நிமிடம் கழித்து அதனுள் கேக் கப்களை வைத்து மூடி 15 நிமிடம் மிதமான சூட்டில் பேக் செய்யவும். 15நிமிடம் கழித்து ஒரு டூத் பிக் வைத்து கேக் வெந்து விட்டதா என்று சரிபார்க்கவும். குச்சியில் கலவை ஒட்ட வில்லை எனில் கேக் வெந்து விட்டது. அடுப்பை அணைத்து கேக்கை ஆறவிடவும். ஒரு கத்தியை வைத்து கிண்ணத்தின் ஓரங்களை கீறி விடவும்.

  5. 5

    கிண்ணங்களை கவிழ்த்து கேக்கை வெளியே எடுக்கவும். சுவையான மிருதுவான ஓரியோ கப் கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sanas Lifestyle (SaranyaElamparuthi)
அன்று
Dharmapuri

Similar Recipes