தயிர் கொழுக்கட்டை (Thayir kolukkattai recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#goldenapron3
கொளுத்தும் வெயிலுக்கு தயிர் மிகவும் நல்லது. பண்டிகை நாட்களில் பால் கொழுக்கட்டை இனிப்பு அதிகம் சேர்த்து விரும்பி செய்வோம். தயிர் கொழுக்கட்டை செய்து பாருங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

மூன்று பேர்
  1. 2பச்சை மிளகாய்
  2. ஒரு தம்ளர்தயிர்
  3. ஒரு கப்இடியாப்ப அரிசி மாவு
  4. இரண்டு கப் தண்ணீர்
  5. 3 ஸ்பூன்துருவிய கேரட்
  6. 4 ஸ்பூன்தேங்காய்த்துருவல்
  7. சிறிதளவுஇஞ்சி
  8. 2 ஸ்பூன் தாளிப்பதற்கு ஆயில்
  9. ஒரு ஸ்பூன் கடுகு
  10. ஒரு ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  11. ஒருசிட்டிகைபெருங்காய தூள்
  12. சிறிதளவுகொத்தமல்லி கருவேப்பிலை தழை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை ஊற்றி ஒரு சிறிய ஸ்பூன் உப்பு போட்டு கொதிக்க விடவும். அதில் அரிசி மாவு ஒரு கப் போட்டு நன்றாக கிளறி மூடி வைக்கவும். கொதித்ததும் சூட்டிலேயே மாவு பாதி வந்துவிடும். மாவை ஒரு தட்டில் கொட்டி நன்கு பிசைந்து கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு சிறிய உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைக்கவும்.

  2. 2

    உருண்டைகளை இட்லி பானையில் ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து தட்டில் கொட்டி ஆற விடவும். ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து சிறிதளவு உப்பு போட்டு கலந்து விடவும். மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் இஞ்சி பச்சை மிளகாய் நைஸாக அரைத்து தயிரில் கலக்கவும். ஒரு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து பெருங்காயம் தாளித்து தயிரில் கலந்து விடவும்.

  3. 3

    வேகவைத்த சிறிய கொழுக்கட்டைகளை ஆறவைத்து தயிரில் கலந்து விடவும். கொத்தமல்லி தழை கருவேப்பிலை அலசி கிள்ளிப் போடவும். துருவிய கேரட் போட்டு அலங்கரிக்கவும். சுவையான தயிர் கொழுக்கட்டை தயார்.ஐந்து நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறுங்கள். வெயிலுக்கு இதமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes

More Recommended Recipes