முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#arusuvai5 முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தம் செய்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் துவரம்பருப்பு
  2. 1முள்ளங்கி
  3. 1 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய்
  4. 1 டீஸ்பூன் கடுகு
  5. 1 காய்ந்த மிளகாய்
  6. 1கொத்து கருவேப்பிலை
  7. 10சின்ன வெங்காயம்
  8. 1தக்காளி
  9. 1 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி
  10. 1/2டீஸ்பூன் பெருங்காயத் தூள்
  11. 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  12. தேவைக்கேற்ப உப்பு
  13. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
  14. 1 கப் புளிக்கரைசல்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    துவரம் பருப்புடன் சிறிது மஞ்சள் தூள் பெருங்காயத் தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவைத்து வைக்கவும்.

  2. 2

    முள்ளங்கியை தோல் சீவி மெலிதாக நறுக்கி ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பொன்நிறமாக மாறும் வரை வதக்கி எடுத்து வைக்கவும்.

  3. 3

    அதே கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    ஒரு டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி, தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அதனுடன் வதக்கி வைத்த முள்ளங்கியை மற்றும் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து முள்ளங்கி வேகும் வரை கொதிக்க விடவும்.

  5. 5

    முள்ளங்கி வெந்தவுடன் வேக வைத்த பருப்புடன் புளி கரைசலை சேர்த்து வெள்ளையாக நுரை கட்டி வரும் வரை கொதிக்க வைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும். கமகமக்கும் முள்ளங்கி சாம்பார் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes