சேமியா பிரியாணி

ARM Kitchen
ARM Kitchen @cook_19311448
Bangalore,India

சேமியா பிரியாணி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சிக்கன் 1/2 கிலோ
  2. அணில் சேமியா 300 கிராம்
  3. 3வெங்காயம்
  4. 6பச்சைமிளகாய்
  5. தயிர் 1/2 கப்
  6. மல்லிதழை
  7. புதினா இலை
  8. இஞ்சி ஒரு துண்டு
  9. பூண்டு 6 பல்
  10. மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன்
  11. மிளகாய்தூள் 1 ஸ்பூன்
  12. பிரியாணி மசாலா 1/2ஸ்பூன்
  13. 1பிரியாணி இலை
  14. பட்டை 2 துண்டு
  15. 3லவங்கம்
  16. 2ஏலக்காய்
  17. உப்பு தேவைக்கு
  18. எண்ணெய்
  19. லெமன் பாதி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சிக்கனை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும், பிறகு சேமியாவை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும், வெங்காயம், மல்லிதழை, புதினா இலை, பச்சைமிளகாய், நறுக்கி கொள்ளவும், பிறகு ஒரு ஜாரில் இஞ்சி, பூண்டு, 3பச்சைமிளகாய், சிறிது மல்லிதழை, சிறிது புதினாஇலை, சேர்த்து அரைத்துக் கொள்ளவும், பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயத்தை போட்டு ப்ரவுன் நிறத்தில் வறுத்து எடுத்துக் கொள்ளவும், பிறகு சிக்கனில் தயிர், அரைத்த இஞ்சி, பூண்டு விழுது,

  2. 2

    வறுத்த வெங்காயத்தில் பாதி, பிரியாணி மசாலா, மிளகாய்தூள், மஞ்சள்தூள், சிறிது மல்லிதழை, புதினாஇலை உப்பு, கலந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்,ஊறியதும் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய்,சேர்த்து பொரிந்ததும் அதில் ஊறவைத்த சிக்கனை சேர்க்கவும்,

  3. 3

    சிக்கனை நன்கு கிளறி வேகவிடவும், சிக்கன் வெந்ததும் அதில் பச்சைமிளகாய், மீதம் இருகிற வறுத்த வெங்காயம், மல்லிதழை, புதினாஇலை, சேர்த்து கிளறி அதில் சேமியா சேர்த்து நன்கு கிளறி மூடிவைத்து தீயை முழுவதும் குறைத்து 10நிமிடம் வைத்து விடவும், பிறகு எடுத்து பரிமாறவும். சுவையான சேமியா பிரியாணி தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ARM Kitchen
ARM Kitchen @cook_19311448
அன்று
Bangalore,India
I like to prepare different types of dishes and more delicious
மேலும் படிக்க

கமெண்ட் (12)

Similar Recipes