சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும்.வெந்தயம், உளுத்தம்பருப்பு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும். 4 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கிரைண்டரில் அரைத்து எடுத்து 8 மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.
- 2
மாவு நன்கு புளித்து வந்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.தோசை கல் அடுப்பில் வைத்து சூடாக வந்ததும் எண்ணெய் தடவி அதன் மேல் ஒரு கரண்டி மாவை ஊற்றி தேய்த்து விடவும்.
- 3
தோசை சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான கல் தோசை தயார்.
- 4
ஹோட்டல் சாம்பார் செய்முறை: குக்கரில் துவரம் பருப்பு, பூண்டு பல், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு இறக்கவும்.பிறகு கரண்டியால் மசித்து விடவும்.
- 5
வானலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மல்லி, மிளகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், தேங்காய் சேர்த்து வறுத்து எடுத்து மிக்ஸியில் பவுடராக அரைத்து கொள்ளவும்.
- 6
வானலில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு மசித்து வதக்கி காய்கறிகளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும்.
- 7
காய் வெந்ததும் அரைத்த மசாலா பவுடர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு புளி கரைத்து வடிகட்டி கரைசலை ஊற்றவும். பின்னர் மசித்த பருப்பு சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொதிக்க விடவும்.
- 8
குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்த்து கிளறி கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கவும். ஹோட்டல் சுவையில் கல் தோசை, சாம்பார் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
கமெண்ட் (13)