ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் பால் சாதம்#hotel

joycy pelican
joycy pelican @cook_20701700

ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் பால் சாதம்#hotel

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கப் சீரக சம்பா அரிசி
  2. 5ஏலக்காய்
  3. 5 கிராம்பு
  4. இரண்டு துண்டு பட்டை
  5. 2பிரிஞ்சி இலை
  6. ஒரு அன்னாசிப் பூ
  7. இரண்டு மராட்டி மொக்கு
  8. சிறிதளவுகல்பாசி
  9. 2 ஸ்பூன் எண்ணெய்
  10. 2 டீஸ்பூன் நெய்
  11. கால் ஸ்பூன் சோம்பு
  12. 1வெங்காயம் நீளமாக நறுக்கியது
  13. 2 பச்சை மிளகாய்
  14. அரை மூடி தேங்காய் பால்
  15. தேவையானஅளவு மல்லி இலை
  16. தேவையானஅளவு புதினா இலை
  17. ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  18. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் அரிசியை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் அரை மூடி தேங்காய் அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கர் சூடானதும் நெய்,எண்ணெய் காய்ந்ததும் அதில் பிரிஞ்சி இலை,பட்டை, ஏலக்காய் கிராம்பு,அன்னாசி பூ,மராட்டி மொக்கு,கல்பாசி, சோம்பு போட்டு பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கவும்.

  4. 4

    அதில் பச்சைமிளகாய் சிறிதளவு மல்லி இலை புதினா சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

  5. 5

    அதனுடன் 2 கப் தேங்காய் பால் சேர்த்து நன்றாக கொதித்து வந்தவுடன் சீரக சம்பா அரிசியை போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து சிறிதளவு கொத்தமல்லி புதினா சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வைக்க வேண்டும்.

  6. 6

    அப்படியே அடுப்பை அணைத்துவிட்டு ஒரு பத்து நிமிடம் வைக்க வேண்டும்.

  7. 7

    இப்போது சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் தேங்காய் பால் சாதம் ரெடி.

  8. 8

    சூடான தேங்காய்ப்பால் சாதத்துடன் சிக்கன் கிரேவி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
joycy pelican
joycy pelican @cook_20701700
அன்று

Similar Recipes