சமையல் குறிப்புகள்
- 1
பருப்பு வேகவைத்த தண்ணீர் மற்றும் மலர வேகவைத்த பருப்பு ஆகியவற்றை தயாராக எடுத்து வைக்கவும்
- 2
தக்காளி ஐ கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடங்கள் வரை போட்டு கொதிக்க விட்டு இறக்கி தோல் உரித்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும் பின் புளியை சூடான தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கரைத்து கொள்ளவும்
- 3
பூண்டை உரித்து மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும் மிகவும் நைசாக அரைக்க வேண்டாம் மிளகை சின்ன குழவியால் ஒரு இடி லைட்டா இடித்து வைக்கவும் கொத்தமல்லி தழை மற்றும் பச்சை மிளகாய் ஐ பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விட்டு பின் சீரகம் சேர்த்து வெடித்ததும் இடித்த மிளகு சேர்த்து பொரிய விடவும்
- 5
பின் பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும் பின் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 6
பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு சுண்டும் வரை வதக்கவும்
- 7
பின் புளியை வடிகட்டி ஊற்றி உப்பு மற்றும் ரசப்பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 8
தக்காளி புளி இரண்டும் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு பின் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து பருப்பு தண்ணீரை ஊற்றி நன்கு கிளறவும்
- 9
பெருங்காயத்தூள் சேர்த்து ஓரங்களில் நுரைத்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 10
பருப்பு தண்ணீரை ஊற்றி கொதிக்க விட கூடாது புளிக்கரைசல் மற்றும் தக்காளி விழுதை பச்சை வாசனை போக கொதிக்க விட்டபின் பருப்பு தண்ணீரை ஊற்றவும்
- 11
சுவையான ஆரோக்கியமான மணமான பூண்டு ரசம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#cf8மிளகு ரசம் இந்த பனி காலத்திற்கு மிகவும் நல்லது . தொண்டை தொற்று, சளி ,காய்ச்சல் போன்றவை வராமல் தடுக்கும். தட்பவெப்ப நிலைக்கேற்ப தரமான போட்டி தலைப்பு தந்த குக் பாடிர்க்கு நன்றி. Meena Ramesh -
-
-
-
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh -
*ஒன்பாட் ரசம் சாதம்*
சாம்பார் சாதம் செய்வது போல், ரசம் சாதத்தையும், குக்கரில் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
சின்ன வெங்காய புதினா ரசம்
#sambarrasamபுதிய முயற்சியாக செய்த ரசம். சுவை மற்றும் வாசனை அருமையாக இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். Sowmya sundar -
தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)
தூதுவளை இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதில் முட்கள் மிகவும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இந்த ரசம் சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற எல்லா சுவாசம் சம்பந்தமான தொந்தரவுகளுக்கும் மிகவும் சிறந்தது.#sambarrasam Renukabala -
-
-
-
பூண்டு சட்னி
#mom பாலூட்டும் தாய்மார்கள் பூண்டினை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்... அந்தப் பூண்டினை ஒரே மாதிரி இல்லாமல் வேறு வேறு விதமாக செய்து கொடுக்கையில் பூண்டின் சக்தியும் தாய்மார்களுக்கு சலிப்பு இல்லாமலும் உண்பார்கள் Viji Prem -
தூதுவளை இலை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
#cபருப்பு சேர்த்து செய்வதால் ருசி மிகவும் நன்றாக இருக்கும் புளி சேர்க்க வேண்டாம் தக்காளி புளிப்பே நன்றாக இருக்கும் புளி சேர்ப்பதால் தூதுவளை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் இழந்து விடும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)