பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆

#sambarrasam
கத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.
பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆
#sambarrasam
கத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
அரை கப் துவரம் பருப்பை கழுவி 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைக்கவும். அதில் கால் ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 விசில் அல்லது பருப்பு நன்கு குழைய வேகவைக்கவும். கத்திரிக்காயை படத்தில் காட்டியுள்ளபடி அரிந்து கொள்ளவும். நீளவாக்கில் அரியாமல் குறுக்கு வாக்கில் அரியவும். ஒரு முழு பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். சிறிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் இரண்டு இரண்டாக அரிந்து கொள்ளவும். ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பெரிய வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு பூண்டு பல்கலை சேர்த்து சிறிது வதக்கவும். சிவக்க வதக்க வேண்டாம். வாசம் வந்தால் போதும். பிறகு அதில் மூன்று ஸ்பூன் சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக வதக்கவும்.பிறகு கத்திரிக்காயை சேர்த்து கொள்ளவும். சிறிது வதக்கவும்.(கத்தரிக்காயை எப்பொழுதும் அரிசி கழுவிய தண்ணீர் அரிந்து போட்டால் கருக்காது. மேலும் அரிசி கழுவிய தண்ணீரில் காயை வேக வைத்தால் சுவை கூடும்.)
- 3
மிதக்கும் அளவிற்கு அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து(சுமார் ஒரு டம்ளர் அளவு தண்ணீர்) காயை வேக விடவும். கத்தரிக்காய் வெந்த பிறகு நன்கு வேக வைத்த பருப்பை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இப்போது கரைத்த புளித்தண்ணீரை சேர்த்து கொள்ளவும். இந்த குழம்பிற்கு காரம் அதிகமாகவும் புளி குறைவாகவும் சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.
- 4
புளி தண்ணீர் பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிடவும் தேவையென்றால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயத் தூள் வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
- 5
சாதத்தில் பூண்டு கத்தரி காயுடன் சாம்பாரை ஊற்றி கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
கொத்தவரங்காய் பருப்பு சாம்பார்
#sambarrasamபிஞ்சு கொத்தவரங்காயில் வெங்காயம் சேர்க்காமல் செய்தால் பருப்பு சாம்பார். Meena Ramesh -
-
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
வாழைக்காய் பொரியல்
#bookவிரத சமையலுக்கு ஏற்ற பொரியல். சாதரணமாக வாழைக்காய் பொரியல் செய்வதை காட்டிலும், இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
-
-
-
-
-
-
அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்
#bookமதிய உணவிற்கு ஏற்ற சாம்பார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிபி.. என் மகனுக்கு மிகவும் பிடித்த சாம்பார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காயை அரைத்து விடுவதால் துவரம் பருப்பு குறைவாகத்தான் தேவைப்படும். Meena Ramesh -
-
-
-
-
முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு
#bookஇன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
முள்ளங்கி கதம்ப சாம்பார்.
#everyday-2 முள்ளங்கி கூடே வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி சேர்த்து செய்த சுவைமிக்க கதம்ப சாம்பார்... Nalini Shankar -
-
-
-
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋 Meena Ramesh -
More Recipes
கமெண்ட் (2)