எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40minits
2 பரிமாறுவது
  1. மீன் அரை கிலோ அரிசி ஒரு டம்ளர்
  2. பிரியாணி மசாலா அரைப்பதற்கு பட்ட கல்பாசி பூ சீரகம் சோம்பு பிரியாணி இலை மிளகு கிராம்பு ஏலக்காய்
  3. வெங்காயம் 1 தக்காளி 2 பச்சை மிளகாய் 2 புதினா ஒரு கைப்பிடி அளவு மல்லி இலை ஒரு கைப்பிடி அளவு
  4. இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன் தயிர் 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள் தேவையான அளவு உப்பு தேவையான அளவு
  5. நெய் 2 டேபிள்ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

40minits
  1. 1

    பிரியாணி மசாலா அரைப்பதற்கு தேவையான பொருட்கள் மசாலா பொருட்களை இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    மீனில் மிளகாய்த் தூள் மஞ்சள் தூள் உப்பு அரைத்த மசாலா அரை டீஸ்பூன் சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்

  3. 3

    பிறகு அரிசியை வேக வைப்பதற்கு ஒரு பாத்திரத்தில் பட்டை பிரியாணி இலை கிராம்பு தாளித்து அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து அரிசி யை பாதியளவு வேக வைக்கவும்

  4. 4

    ஊற வைத்த மீனை மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் மட்டும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

  5. 5

    பிறகு ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் பிரியாணி இலை பட்டை கிராம்பு போட்டு தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  6. 6

    புதினா மல்லி இலை சேர்த்து பிறகு அரைத்து வைத்த பிரியாணி மசாலாதேவையான அளவு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும் பிறகு 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கவும்

  7. 7

    நன்கு வதங்கிய பின் பொரித்த மீனை வைத்து அதன்மேல் பாதியளவு வேக வைத்த சாதத்தையும் வைத்து மசாலாவில் சேர்த்து புதினா மல்லி இலை சேர்த்து

  8. 8

    மிதமான தீயில் 20 நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் பிரியாணி ரெடி

  9. 9

    மிகவும் சுவையான மணமணக்கும் மீன் பிரியாணி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes