காலிஃப்ளவர் மிளகு பொரியல்

Shamee S
Shamee S @cook_19454836
India

காலிஃப்ளவர் மிளகு பொரியல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. காலிஃப்ளவர்
  2. 1 வெங்காயம்
  3. 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  4. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1 ஸ்பூன் மிளகு தூள்
  7. 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  8. 1 டேபிள் ஸ்பூன் தயிர்
  9. 1 ஸ்பூன் கடுகு
  10. 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  11. 1 ஸ்பூன் உப்பு
  12. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  13. 1 கொத்து கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    காலிஃப்ளவரை சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும். அதனை மஞ்சள் தூள், உப்பு கலந்த சுடுநீரில் 10 நிமிடம் போட்டு வடிகட்டி வைக்கவும். பூச்சி எதுவும் இருந்தால் வந்து விடும்.

  2. 2

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். காலிஃப்ளவருடன்ன் இஞ்சிபூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, தயிர், கடலை மாவு சேர்த்து பிசிறி வைக்கவும்.

  3. 3

    பானில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் வதங்கியதும் காலிஃப்ளவர் கலவையை சேர்த்து வதக்கவும்..

  5. 5

    காலிஃப்ளவர் வெந்ததும் மிளகு தூள் சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒரு சேரபிரட்டி விட்டு 5 நிமிடம் வேக விடவும்.

  6. 6

    எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.

    சுவையான காலிப்ளவர் மிளகு பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shamee S
Shamee S @cook_19454836
அன்று
India

Similar Recipes