நாட்டுக்கோழி சாப்ஸ்

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#mom குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நாட்டுக்கோழி சமைத்துக் கொடுப்பது கிராமத்து வழக்கம் அந்த நாட்டுக்கோழி நல்லெண்ணெயை வைத்த நாட்டு கோழி சாப்ஸ் செய்துள்ளேன் தாய்மார்களுக்கு வாய்க்கு ருசியாகவும் இருக்கும் தாய்ப்பாலும் ஊரும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ நாட்டுக்கோழி
  2. 1நறுக்கிய பெரிய வெங்காயம்
  3. 15நறுக்கிய சின்ன வெங்காயம்
  4. 1நறுக்கிய தக்காளி
  5. 2 டேபிள்ஸ்பூன் பூண்டு விழுது
  6. 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி விழுது
  7. 7-10 வர மிளகாய் (30 நிமிடம் சுடுதண்ணீரில் ஊற வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்)
  8. 1 டீஸ்பூன் தனியா தூள்
  9. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  11. 1டீஸ்பூன் சிக்கன் மசாலா
  12. 1/2கப் துருவிய தேங்காய் (சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்)
  13. நெல்லிக்காய் அளவுபுளி (கரைத்துக்கொள்ளவும்)
  14. உப்பு
  15. 1 பட்டை
  16. 2 லவங்கம்
  17. 1பிரிஞ்சி இலை
  18. 1டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  19. 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  20. கறிவேப்பிலை
  21. கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை சேர்க்கவும் பிறகு இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்

  2. 2

    வெங்காயம் வதங்கிய பின் இதனுடன் பூண்டு விழுது இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் பிறகு அரைத்து வைத்த வர மிளகாய், மஞ்சள் தூள்

  3. 3

    தனியாத்தூள் கரம் மசாலா சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் பிறகு இதனுடன் சிக்கன் மசாலா

  4. 4

    தேவையான அளவு உப்பு நறுக்கிய தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி எண்ணெய் பிரிந்த பின் கருவேப்பிலை சேர்க்கவும்

  5. 5

    நாட்டுக்கோழியை படத்தில் காட்டியவாறு கால் பகுதியும் நெஞ்சுப் பகுதியும் ஆக வெட்டி வாங்கிக் கொள்ளவும் பிறகு இதை உப்பு நீரில் மஞ்சள் கலந்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்... இப்போது நாட்டுக்கோழி இதனுடன் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்

  6. 6

    இப்போது இதனுடன் அரைத்த தேங்காய் சேர்த்து (வரமிளகாய் அரைத்த மிக்ஸியில் தேங்காய் அரைத்தேன் அதனால் இந்தக் கலரில் உள்ளது) நன்றாக கிளறி 2 கப் தண்ணீர் சேர்த்து நாட்டுக்கோழியை நன்றாக வேகவிடவும் குக்கரில் வேக வைப்பது என்றால் 3-4 விசில் விடவும் பிறகு இதில் புளிக் கரைசலை சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும்

  7. 7

    இப்போது குழம்பு கெட்டியாகி எண்ணெய் பிரியும் போது இதில் 2 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes